- Home
- Tamil Nadu News
- கேரட் அல்வா முதல் ஐஸ்கிரீம் வரை.! தொண்டர்களுக்காக விஜய்யின் ருசியான உணவுகள்- பட்டியல் இதோ
கேரட் அல்வா முதல் ஐஸ்கிரீம் வரை.! தொண்டர்களுக்காக விஜய்யின் ருசியான உணவுகள்- பட்டியல் இதோ
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் நடைபெறுகிறது. இதில் 3,000 நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். விழாவில் பங்கேற்பாளர்களுக்கு 21 வகையான ருசியான உணவு வகைகள் பரிமாறப்பட உள்ளன.

கேரட் அல்வா முதல் ஐஸ்கிரீம் வரை.! தொண்டர்களுக்காக விஜய்யின் ருசியான உணவுகள்
தமிழகத்தில் திமுக- அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே மாறி, மாறி ஆட்சி அமைத்து வரும் நிலையில், அதற்கு போட்டியாக களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய். தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த விஜய், தனது கட்சியின் கொடி மற்றும் பாடலை வெளியிட்டு அசத்தினார்.
அடுத்ததாக விக்கிரவாண்டியில் மிக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தியும் தமிழக மட்டுமின்றி இந்தியாவையே திருப்பி பாரக்க வைத்தார். இந்த நிலையில் 2026ஆம்ஆண்டு சட்டமன்ற தேர்தல் தான் இலக்கு என அறிவித்துள்ள விஜய், அதற்காக தமிழகத்தில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் நிர்வாகிகள் நியமித்து வருகிறார்.
tvk anniversary
இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழகம் தொடங்கி 2 ஆம் ஆண்டை கொண்டாடிடும் வகையில் மிகப்பிரம்மாண்டமான ஏற்பாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் விடுதியில் தவெக ஆண்டு விழாவுக்கு நடைபெறவுள்ளது. இதில் 3,000 நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தவெக ஆண்டு விழாவில் பங்கேற்பதற்கான பாஸ் இருப்பவர்கள் மட்டும்தான் விழா அரங்கிற்குள் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
tvk anniversary
தவெக மாநாடு நடைபெறும் விழா அரங்கிற்கு முன்பாக அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட கட்சியின் கொள்கைத் தலைவர்களின் படங்கள் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விழாவிற்கு வருகை தரும் விஜயை வரவேற்கும் வகையில் இசிஆர் சாலை முழுவதும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஆண்டு விழாவில் கலந்து கொள்ளும் நிர்வாகிகளுக்கு ருசியான உணவுகளும் தயாராகி வருகிறது. அந்த வகையில்
தவெக நிர்வாகிகளுக்கு ருசியான உணவுகள்
1.கேரட் அல்வா, 2. மசால் வடை, 3.காலி ஃபிளவர் 65, 4. பூரி, 5. உருளைக்கிழங்கு பட்டாணி குருமா, 6. வெச் பிரியாணி 7. தயிர் பச்சடி 8. சாதம் 9. கதம்ப சாம்பார் 10. அப்பளம் 11. பூசனிக்காய், சௌ சௌ, காரட்,பீன்ஸ் கூட்டு 12. பீன்ஸ் பருப்பு உசிலி 13. ரசம், 14. மோர் 15. சால்ட் 16. வாழைப்பழம் 17. வெண்ணிலா ஐஸ்கிரீம் 19. ஊறுகாய் 20. வாட்டர் பாட்டில் 21. அடை பிரதமம் ஆகிய உணவுகள் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவிற்கு வரும் நிர்வாகிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.