- Home
- Tamil Nadu News
- அமெரிக்காவின் வரிவிதிப்பால் தள்ளாடும் திருப்பூர்! உடனடியா 2 லட்சம் பேரை காப்பாத்தனும் - மோடிக்கு திருப்பூர் எம்பி கடிதம்
அமெரிக்காவின் வரிவிதிப்பால் தள்ளாடும் திருப்பூர்! உடனடியா 2 லட்சம் பேரை காப்பாத்தனும் - மோடிக்கு திருப்பூர் எம்பி கடிதம்
அமெரிக்காவின் 50% வரிவிதிப்பால் திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சம் வேலை இழப்பு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதால் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு திருப்பூர் எம்.பி. சுப்பராயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.

வரிவிதிப்பால் தள்ளாடும் திருப்பூர்
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் இந்தியாவில் பல தொழில்கள் கடுமையாக பாதித்துள்ளன. குறிப்பாக திருப்பூர் மாவட்ட பின்னலாடை தொழில் கடும் சரிவை சந்தித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில், “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி 27ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. அமெரிக்கா மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக இருப்பதால், இந்தய்ாவின் ஆடைத் தொழிலில் இதன் தாக்கம் மிகப்பெரியதாக இருக்கும்.
போட்டியில் இருந்து வெளியேறும் இந்தியா
ஏற்றுமதிகளை 30 முதல் 35 சதவீத விலை நிர்ணயக் குறைபாட்டிற்கு உட்படுத்துவது உறுதி. இந்திய பொருட்கள் போட்டியற்றதாக மாற்றப்படும். இதனால் சீனா, வியட்நாம் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளுக்கு சந்தைகள் இழக்க நேரிடும். இத்தகைய இழப்பு நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தும் அல்லது மீள முடியாத தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த பேரழிவு மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தில் ஒரு மரண அடியை ஏற்படுத்தும். இந்திய அரசு இப்போதே உறுதியான நவடிக்கைகளை எடுக்க ணே்டும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3சதவீத தொழில்துறை உற்பத்தியில் 13 சதவீத, ஏற்றுமதியில் 12 சதவீத பங்களிக்கிறது. மற்றும் 50 மில்லியன் மக்களுக்கு வேலை வாய்ப்பை வழங்குகிறது.
பேரழிவின் விழிம்பில் திருப்பூர்
திருப்பூர் பேரழிவின் சுமையை எதிர்கொள்கிறது. அதன் ஏற்றுமதியில் 40 சதவீதம் அமெரிக்காவிற்கு அனுப்பப்படுகிறது. இது அமெரிக்காவை அதன் மிகப்பெரிய வாடிக்கையாளராக ஆக்குகிறது. திருப்பூர் மொத்த பின்னலாடை ஏற்றுமதியில் 68 சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. இது ஆண்டுக்கு 45000 கோடிக்கு மேல் ஏற்றுமதி வருவாயை உருவாக்குகிறது. இந்த தொழிலில் 15 லட்ம் தொழிலாளர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பை வழங்குகிறது. இதனால் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.
2 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
வரிவிதிப்பால் திருப்பூர் தொழில்துறைக்கு அமெரிக்க ஏற்றுமதியில் மட்டும் ஆண்டுக்கு ரூ.15000 கோடி இழப்பு ஏற்படும், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வேலை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அதிர்ச்சி அளிக்கிறது. இதனை தவிர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.