10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! நாளை காலை 10 மணி முதல்!
தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 16-ம் தேதி வெளியான நிலையில், மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3ம் தேதி முதல் வழங்கப்படும்.

தமிழ்நாட்டில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரையில் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்வினை 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும், 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர். இதனையடுத்து மே 16ம் தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
இதில் மாணவிகள் 4,17, 183 பேரும், மாணவர்கள் 4,00,078 தேர்ச்சி பெற்றனர். இவர்களில் 93.80 சதவீதம் மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் மே 19ம் தேதி முதல் வழங்கப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 3ம் தேதி முதல் வழங்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.
அதன்படி நாளை காலை 10 மணி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மேலும் தேர்வு எழுதிய பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.