- Home
- Tamil Nadu News
- மக்களே போன், லேப்டாப் ஜார்ஜ் போட்டு வச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை!
மக்களே போன், லேப்டாப் ஜார்ஜ் போட்டு வச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணி முதல் மின்தடை!
தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அறிவித்துள்ளது. கோவை, கன்னியாகுமரி, பெரம்பலூர், கே.கே. நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் பிற்பகல் வரை பல மணி நேரம் மின்சாரம் இருக்காது.

துணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
கோவை
வீரமரசம் பேட்டை, புடலூர், அச்சம்பட்டி, புத்தளம், தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஈத்தாமொழி, பொட்டல், கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம், மேட்டுப்பாளையம், திருப்பூர், திருப்பூர், திரு. அத்தியூர், பரவை, கிழுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், கழனிவாசலந்தூர் வி.களத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 3 வரை மின்தடை ஏற்படும்.
கன்னியாகுமரி
கோணம், எறும்புகாடு, ராஜாக்கமங்கலம், பழவிளை, தேக்குறிச்சி, பிள்ளைத்தோப்பு, ஞானபதிபுரம், புத்தளம், தெங்கம்புதூர், கீழகிருஷ்ணன்புதூர், ஏத்தாமொழி, பொட்டல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 8 மணி முதல் 3 வரை மின்விநியோகம் தடை செய்யப்படும்.
பெரம்பலூர்
கழனிவாசலந்தூர் வி.களத்தூர், திருமாந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர், பரவை, கிளுமாத்தூர், ஓலைப்பாடி, ஏலுமோர், மேட்டுப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் 2 வரை பவர் கட் செய்யப்படும்.
கே.கே. நகர்
காந்தி நகர், சஞ்சய் காந்தி நகர், இளங்கோ நகர், இந்திரா நகர், ராஜீவ் காந்தி தெரு, பெரியார் நகர், கண்ணகி தெரு, எம்ஜிஆர் தெரு, சாதிக் பாஷா நகர், ஏரிக்கரை தெரு, தபால் தணிக்கை காலனி, சாய் நகர், வெங்கடேஸ்வரா நகர் மற்றும் விரிவாக்கம், பாஸ்கர் காலனி, வேதா நகர், முனியப்பா நகர், திருவள்ளியம்மாள் அவென்யூ நகர், மல்லியம்மாள் அவென்யூ நகர், நெற்குந்தரம் மெயின் ரோடு, சித்திரை தெரு, வைகாசி தெரு, பங்குனி தெரு, மாசி தெரு, நடேசன் நகர், கங்கை அம்மன் கோயில் தெரு, பச்சையம்மன் கோயில் தெரு, சக்தி நகர், சாய்பாபா காலனி, காளி அம்மன் கோயில் தெரு, எல் அண்ட் டி காலனி, ரத்னா நகர், ஸ்வர்ணாம்பிகை நகர், வெங்கடேஷ் நகர், காரராஜர் நகர், வெங்கடேஷ் நகர் விநாயகம் தெரு, சாய் நகர், பாரதி தெரு, ஸ்ரீ அய்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.