- Home
- Tamil Nadu News
- தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் சதம் அடித்த வெயில்! அதிகபட்சம் இந்த மாவட்டம் தான்?
தமிழ்நாட்டில் நேற்று 9 இடங்களில் சதம் அடித்த வெயில்! அதிகபட்சம் இந்த மாவட்டம் தான்?
தமிழகத்தில் தொடரும் வெயிலுக்கு இடையே, வானிலை மையம் கனமழைக்கு நாள் குறித்துள்ளது. ஜூன் 10, 11, 12 தேதிகளில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழைக்கு நாள் குறித்த வானிலை மையம்
தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த பிறகும் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் 100 டிகிரி தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் வெயிலுக்கு கொஞ்சம் ரெஸ்ட் கொடுக்கும் வகையில் கனமழைக்கு வானிலை மையம் நாள் குறித்துள்ளது.
மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை
அதாவது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் ஜூன் 10, 11, 12 தேதிகளில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெயில் அதிகரிக்கும்
அதேபோல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று முதல் 08ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணித்துள்ளது.
நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்த வெயில்
இந்நிலையில் தமிழகத்தில் நேற்று 9 இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. அதாவது அதிகபட்சமாக வேலூரில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவாகியுள்ளது. மேலும் பாளையங்கோட்டை, ஈரோட்டில் 103 டிகிரியும், திருச்சியில் 102 டிகிரியும், சென்னை மீனம்பாக்கம், கரூர் பரமத்தி, திருத்தணி 101 டிகிரியும், கடலூர் பரங்கிப்பேட்டை, தஞ்சாவூரில் 100 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.