MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • மதுரை
  • சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! மதுரையில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! யார் இந்த காளீஸ்வரன்?

சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! மதுரையில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை! யார் இந்த காளீஸ்வரன்?

Madurai Rowdy Murder: தமிழகத்தில் அடுத்தடுத்து கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ரவுடி காளீஸ்வரன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 23 2025, 12:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
tamilnadu law and order

tamilnadu law and order

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைச் சம்பவங்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். அதாவது திருத்தணி அருகே இளைஞர் வெட்டிக் கொலை, ஈரோட்டில் ரவுடி வழிமறித்து படுகொலை, காரைக்குடியில் காவல்நிலையத்தில் கையெழுத்திட்டு வெளியே வந்தவர் ஓட ஓட விரட்டிக் கொலை, கும்பகோணத்தில் ஜாமீனில் வந்த ரவுடி கொலை உள்ளிட்ட சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுதொடர்பாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சனம் செய்து வருகின்றனர். 

24
Madurai Crime News

Madurai Crime News

மதுரையில் ரவுடி படுகொலை

இந்நிலையில் பிரபல ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள தனக்கன்குளத்தைச் சேர்ந்த ரவுடி காளீஸ்வரன். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. 

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள்! அப்படினா ஒவ்வொரு நாளும் எத்தனை கொலைகள்? பகீர் தகவல்!

34
Madurai Murder

Madurai Murder

மர்ம கும்பல் வெறிச்செயல்

இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் வெட்ட முயன்றனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்து அவர் ஓட முயன்றார். ஆனால், அவரை விடாமல் ஓட ஓட விரட்டி சென்று சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த காளீஸ்வரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த மர்ம கும்பல் அங்கிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பியது. 

இதையும் படிங்க: அதிகாலையில் அலறிய தலைநகர் சென்னை! ரவுடியை சுட்டுப் பிடித்த போலீஸ்! யார் இந்த ஹைகோர்ட் மகாராஜா?

44
Police investigation

Police investigation

முன்விரோதம் காரணமாக கொலை

இந்த கொலை சம்பவம் தொடர்பாக அப்பகதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காளீஸ்வரன் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் உறவினர்களோ, காளீஸ்வரனை வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை உடனே கைது செய்ய வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் காளீஸ்வரனின் உறவினர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றது தெரியவந்தது. முன்னாள் திமுக மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
காவல்
தமிழ்நாடு
கொலை

Latest Videos
Recommended Stories
Recommended image1
மதுரை LIC அலுவலக தீ விபத்தில் திடீர் திருப்பம்.. பெண் மேலாளரை உயிரோடு எரித்து கொன்றது அம்பலம்!
Recommended image2
நிக்காம ரத்தமா போகுது.. என்னை காப்பாத்துங்கப்பா! வெங்காரம் சாப்பிட்ட கல்லூரி மாணவியின் கடைசி நிமிடக் கதறல்! நடந்தது என்ன?
Recommended image3
தேசிய நெடுஞ்சாலையில் அதிர்ச்சி.. பயங்கர சத்தத்துடன் வெடித்த பேருந்து.. அலறிய 55 பயணிகள் நிலை என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved