MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள்! அப்படினா ஒவ்வொரு நாளும் எத்தனை கொலைகள்? பகீர் தகவல்!

திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 6597 படுகொலைகள்! அப்படினா ஒவ்வொரு நாளும் எத்தனை கொலைகள்? பகீர் தகவல்!

திமுக ஆட்சியில் கொலைகள் குறைவு என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில், கடந்த 4 ஆண்டுகளில் 6597 கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்.

2 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 22 2025, 10:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
anbumani ramadoss

anbumani ramadoss

திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக இருக்கிறது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாட்டில் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் கொலை மற்றும் கொள்ளைகள் அதிகரித்து வரும் நிலையில்,  கடந்த 4 ஆண்டுகளில் நடைபெற்ற கொலைகளின் எண்ணிக்கை குறித்து அதிர்ச்சியூட்டும்  உண்மைகள் வெளியாகியுள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதற்கு பிந்தைய 4 ஆண்டுகளில்  6597 படுகொலைகள் நடைபெற்றிருப்பதாக மாநில குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு நாளும்  தமிழ்நாட்டில்  4.54 கொலைகள் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலைகளின் எண்ணிக்கை இந்த அளவுக்கு அதிகரித்திருப்பது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது.

27
MK Stalin

MK Stalin

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து கொடூரக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து வினா எழுப்பும் போதெல்லாம் தமிழ்நாட்டில் கொலைக்குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாகத் தோன்றினாலும் உண்மையில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்றும், முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஒவ்வொரு நாளும் கொடூரக் கொலைகள்.! சுட்டுப் பிடித்து விட்டதாக சப்பைக்கட்டு கட்டுவதா- சீறும் அன்புமணி

37
AIADMK Vs DMK

AIADMK Vs DMK

2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த நிலையில்,  அந்த ஆண்டில் 1686, 2022-ஆம் ஆண்டில் 1690, 2023-ஆம் ஆண்டில் 1681, 2024-ஆம் ஆண்டில் 1540  என கடந்த 4  ஆண்டுகளில் 6597 படுகொலைகள் நடந்துள்ளன.  முதலமைச்சரின் கூற்றுக்கு மாறாக முந்தைய ஆட்சியுடன் ஒப்பிடும் போது  திமுக ஆட்சியில் கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

47
Tamilnadu Murder

Tamilnadu Murder

முந்தைய அதிமுக ஆட்சியில் 2016-ஆம் ஆண்டில் 1603, 2017-ஆம் ஆண்டில் 1560,  2018-ஆம் ஆண்டில் 1569, 2019-ஆம் ஆண்டில் 1745  என 6477 படுகொலைகள்  நிகழ்ந்துள்ளன.  அதிமுக ஆட்சியில் நிகழ்ந்ததை விட  திமுக ஆட்சியில்  120 படுகொலைகள்  அதிகமாக நிகழ்ந்துள்ளன. சராசரி அடிப்படையில் பார்த்தால், அதிமுக ஆட்சியை விட திமுக ஆட்சியில் ஆண்டுக்கு  30 படுகொலைகள்  அதிகமாக நடந்திருக்கின்றன.  விழுக்காட்டின் அடிப்படையில் பார்த்தால் அதிமுக ஆட்சியின்  முதல்  4 ஆண்டுகளை விட, திமுக ஆட்சியின் முதல்  4 ஆண்டுகளில்  கிட்டத்தட்ட 2% கொலைகள் அதிகமாக நடந்திருக்கின்றன.

இதையும் படிங்க:  டாஸ்மாக் பணம் ரூ.1000 கோடி யாருக்கு போனது? ED கொடுத்த லிஸ்ட்- களத்தில் இறங்குமா சி.பி.ஐ.? அன்புமணி

57
Anbumani Ramadoss Vs DMK

Anbumani Ramadoss Vs DMK

திமுக ஆட்சியில் உண்மையிலேயே சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொலைகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால்,  திமுக ஆட்சியில்  கொலைகளின் எண்ணிக்கை  அதிகரித்துக் கொண்டு தான் செல்கிறது.  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நாளுக்கு நாள் சீர்குலைந்து வருகிறது என்பதற்கு  திமுக அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தான் சான்று ஆகும்.

67
Jayakumar

Jayakumar

கொலை வழக்குகளில் கடுமையான நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதாக திமுக அரசு கூறுகிறது. அதிலும் உண்மை இல்லை. கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நெல்லை மாவட்ட காங்கிரஸ்  தலைவர் ஜெயக்குமாரை  படுகொலை செய்தவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை; திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த சேமலைக்கவுண்டன் பாளையம் கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமான் முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த பட்டியல் இன்னும் நீண்டு கொண்டே செல்கிறது. 

77
Tamilnadu police

Tamilnadu police

கொலைகளைத் தடுப்பதிலும், துப்புதுலக்குவதிலும் தமிழக காவல்துறை மிக மோசமாகத் தான் செயல்பட்டு வருகிறது. குற்றங்களைத் தடுப்பதாகக் கூறி  ஆட்சிக்கு வந்த  திமுக, கொலைகளையும், கொள்ளைகளையும்  தடுக்க முடியாமல் திணறி வருகிறது. இதற்கு காரணம் திமுக அரசின் செயல்திறனற்ற தன்மை தான். தமிழக் அரசும், காவல்துறையும் இனியாவது விழித்துக் கொண்டு குற்றங்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என அன்புமணி கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
கொலை
குற்றம்
திமுக
மு. க. ஸ்டாலின்
அன்புமணி ராமதாஸ், பாட்டாளி மக்கள் கட்சி
தமிழ்நாடு
Latest Videos
Recommended Stories
Recommended image1
இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்காம்.. எச்சரித்த கையோடு மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்
Recommended image2
குடும்ப தலைவிகளுக்கு குட்நியூஸ்.! அக்கவுண்ட்டில் ரூ.5000 வரவு.! யாருக்கெல்லாம் கிடைக்கும்?
Recommended image3
10-ஆம் வகுப்பு தமிழ்: அதிக மதிப்பெண் பெற 'டாப்பர்ஸ்' கடைபிடிக்கும் குறிப்புகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved