வெள்ளலூர் குப்பை கிடங்கு எதிரொலி - டுவிட்டரில் டிரெண்டாகும் திமுக வேண்டாம் போடா ஹேஷ்டாக்!
கோவையில் வெள்ளலூர் குப்பை பிரச்சனைக்கு இதுவரையில் தீர்வு காணாத நிலையில், கோவைக்கு வரும் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து கருப்பு பலூன் பறக்க விட்டும், திமுக வேண்டாம் போடா என்ற டீ-சர்ட் அணிந்தும் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.
வெள்ளலூர் குப்பை கிடங்கு: திமுக_வேண்டாம்_போடா
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் மொத்தமாக வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. கோவையின் புறநகர் பகுதியாக வெள்ளலூர் இருந்தாலும், அங்கும் மக்கள் வசிக்கத் தான் செய்கிறார்கள். பள்ளிகள், தனியார் நிறுவனங்கள் அப்பகுதியில் இயங்கி வருகின்றன.
வெள்ளலூர் குப்பை கிடங்கு: திமுக_வேண்டாம்_போடா
நாள்தோறும் 100க்கும் அதிகமான வாகனங்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் டன் கணக்கில் கொட்டப்பட்டு வருகிறது. அப்படி குப்பைகளை கொட்டுவதன் மூலமாக சுற்றுச்சூழல் பாதிப்பு, எரியூட்டப்படும் குப்பைகளால் மக்களுக்கு சுவாச பாதிப்பு, சுகாதார சீர்கேடு, நோய் பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது.
வெள்ளலூர் குப்பை கிடங்கு: திமுக_வேண்டாம்_போடா
இது குறித்து மாவட்ட ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த பயனும் இல்லாத நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நடந்து வந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு மாநகராட்சி சார்பில் பசுமை தீர்ப்பாயத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வெள்ளலூர் குப்பை கிடங்கு: திமுக_வேண்டாம்_போடா
அவர்கள் தாக்கல் செய்திருந்த அறிக்கையில், வெள்ளலூருக்கு கொண்டு வரப்படும் குப்பைகள் 50 சதவிகிதமாக குறைக்கப்படும் என்றும், 15.5 லட்சம் கன மீட்டர் குப்பைகள் ஒரு வருட காலத்திற்குள் அழிக்கப்படும் என்றும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
வெள்ளலூர் குப்பை கிடங்கு: திமுக_வேண்டாம்_போடா
ஆனால், அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், குப்பைகள் கொண்டும் எண்ணிக்கை தான் அதிகரித்து வந்துள்ளது. இந்த நிலையில், வெள்ளலூர் குப்பைக் கிடங்கை எதிர்த்து கோவையில் மக்கள் போராட்டம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. கோவைக்கு வருகை தரும் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக திமுக வேண்டாம் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் உருவாக்கி மக்கள் போராட தொடங்கியுள்ளன.
வெள்ளலூர் குப்பை கிடங்கு: திமுக_வேண்டாம்_போடா
கோவை தொடர்ந்து புறக்கணித்து கோவை மாநகராட்சி வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து 10 கிலோமீட்டர் வரை துர்நாற்றம் அதிகம் பரவுகிறது. இதை தடுக்க திமுக அரசுக்கு வக்கில்லையா, இதே நிலை நீடிக்குமானால் அனைத்து மக்களும் போராட தயாராக உள்ளோம். கோவைக்கு வருகை தரும் ஸ்டாலினை கண்டித்து கருப்பு_பலூன்_பறக்க_விட்டு மற்றும் திமுக_வேண்டாம்_போடா_T_சர்ட்_அணிந்து எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் என்று #ஈரோடு_புறநகர்_மேற்கு_மாவட்ட_தகவல்_தொழில்_நுட்பபிரிவு , கோவை_மண்டலம் சார்பாக அணி திரள்வோம் என்று #மக்கள்_போராட்டம் என்ற ஹேஷ்டேக்குடன் அதிமுக மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு குழு உறுப்பினர் மகேஷ்ராஜா என்பவரது டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.