MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • கோயம்பத்தூர்
  • கோவை மட்டுமல்ல.. இந்த மூன்று மாவட்டங்களில் விடாமல் கொட்டப்போகும் கனமழை.!

கோவை மட்டுமல்ல.. இந்த மூன்று மாவட்டங்களில் விடாமல் கொட்டப்போகும் கனமழை.!

கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Apr 04 2026, 02:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்
Image Credit : Asianet News

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்

பொதுவாக மே மாதத்தில்தான் அக்னி நட்சத்திரம் தொடங்கும். ஆனால், புவி வெப்பமடைதல் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மாற்றம் காரணமாக ஏப்ரல் மாதத்திலேயே வேலூர், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. குறிப்பாக உள் மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் சுகாதாரத்துறை பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.

26
ஹீட் ஸ்ட்ரோக் எச்சரிக்கை
Image Credit : Asianet News

ஹீட் ஸ்ட்ரோக் எச்சரிக்கை

தாகம் இல்லாவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்கவும். இளநீர், நன்னாரி சர்பத், மோர் மற்றும் பழச்சாறுகள் உடலுக்குக் குளிர்ச்சி தரும். காரமான மற்றும் எண்ணெய் பலகாரங்களைத் தவிர்த்து, நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகளான வெள்ளரிக்காய், தர்பூசணி மற்றும் புடலங்காயைச் சேர்த்துக் கொள்ளவும். இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான பருத்தி (Cotton) ஆடைகளை அணியவும். வெளியே செல்லும்போது குடை அல்லது தொப்பி அணிவது அவசியம். மதியம் 12 மணி முதல் 4 மணி வரை நேரடியாக வெயிலில் வேலை செய்வதைத் தவிர்க்கவும். இது 'ஹீட் ஸ்ட்ரோக்' (Heatstroke) எனப்படும் வெப்ப மயக்கத்தைத் தடுக்க உதவும்.

Related Articles

Related image1
தேர்தல் பிரச்சாரத்தில் பேராபத்து? ஸ்டாலின், இபிஎஸ், விஜய்க்கு.. டெல்டா வெதர்மேன் வைத்த முக்கிய அலர்ட் மெசேஜ்
Related image2
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம்..
36
கோவையில் கனமழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

கோவையில் கனமழை எச்சரிக்கை

இந்நிலையில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களுக்கு வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது சுமார் 0.9 கிமீ உயரத்தில் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

46
இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Image Credit : Asianet News

இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை

அதேபோல் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 6ம் தேதி தென்தமிழகதில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

56
வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
Image Credit : our own

வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

இன்று முதல் ஏப்ரல் 07 வரை வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். தென்தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

66
சென்னை வானிலை அப்டேட்
Image Credit : Asianet News

சென்னை வானிலை அப்டேட்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமிழ்நாடு மழை
வெப்ப அலை
மழை செய்திகள்
கனமழை
தமிழ்நாடு வானிலை அறிக்கை
கோடைக்காலம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
அரசு பேருந்தில் இளம்பெண்ணை மடியில் உட்கார வைத்து! கண்ட இடத்தில் கை வைத்து எல்லை மீறல்! தலையில் அடித்துக்கொண்ட பயணிகள்!
Recommended image2
கோவை KG கல்லூரி வளாகத்தில் மாணவிக்கு கத்தி குத்து.. நடந்தது என்ன? பரபரப்பு தகவல்
Recommended image3
சித்தப்பா சொல்லி.! கோவையில் 26 வயது இந்திராணியும் 41 வயது நபரும்! வசமாக சிக்கியது எப்படி? பரபரப்பு தகவல்!
Related Stories
Recommended image1
தேர்தல் பிரச்சாரத்தில் பேராபத்து? ஸ்டாலின், இபிஎஸ், விஜய்க்கு.. டெல்டா வெதர்மேன் வைத்த முக்கிய அலர்ட் மெசேஜ்
Recommended image2
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. முழு ஆண்டு தேர்வு தேதியில் மாற்றம்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved