- Home
- Tamil Nadu News
- சென்னை
- Chennai Power Cut: சென்னையில் நாளை மின் தடை! எந்தெந்த இடங்கள்? முழு லிஸ்ட் இதோ!
Chennai Power Cut: சென்னையில் நாளை மின் தடை! எந்தெந்த இடங்கள்? முழு லிஸ்ட் இதோ!
சென்னையின் பல்வேறு இடங்களில் நாளை மின் தடை செய்யப்பட உள்ளது. எந்தெந்த இடங்களில் மின் விநியோகம் இருக்காது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.

Power outage in Chennai
தமிழ்நாடு முழுவதும் மின்வாரியம் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்கிறது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை செய்யப்படும். இது குறித்து மின்சார வாரியம் முன்கூட்டியே தெரிவித்து விடும். இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) சென்னையின் புறநகர் பகுதியில் மின் தடை செய்யப்பட உள்ளது.
சென்னையில் நாளை மின் தடை
இதுதொடர்பாக மின்வாரியம் வெளியிட்ட செய்தியில் கூறுகையில், ''சென்னையில் மே 31ம் தேதி (நாளை ) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இந்த பணியின் காரணமாக பெருங்களத்தூர், முடிச்சூர், நந்தம்பாக்கம், மாதம்பாக்கம் உள்ளிட்ட ஏரியாக்களில் உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடைப்பட உள்ளது. மதியம் 2 மணிக்கு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு மீண்டும் மின் இணைப்பு வந்து விடும்.
பெருங்களத்தூரில் எந்தெந்த இடங்கள்?
பெருங்களத்தூரில் காந்தி நகர், கிருஷ்ணா ரோடு, முத்துவேளாளர் ரோடு, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், ஜிஎஸ்டி ரோட்டின் ஒரு பகுதி (எரணியம்மன் கோவிலுக்கு பின்புறம்) ஆகிய இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது.
முடிச்சூரில் அமுதம் நகர், ஏஎன் காலனி, அஷ்டலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், விஎம் கார்டன் உள்ளிட்ட இடங்களில் மின்விநியோகம் இருக்காது.
நந்தம்பாக்கம், மணப்பாக்கம்
நந்தம்பாக்கத்தில் மணப்பாக்கம் மற்றும் கோலப்பாக்கம் ரோடு, காசா கிராண்டா கஸ்டர் மற்றுமு் வுட்சைட், கிரிகோரி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பெல் நகர், ஸ்ரீராம் கார்டன், மைக்ரோமார்வெல், தர்மராஜபுரம், பிபிசிஎல் பேஸ் I, II, வல்லிஸ்வரன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட உள்ளது.
மாதம்பாக்கத்திலும் மின் தடை
இதேபோல் மாதம்பாக்கத்தில் படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்யா நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் தடைப்பட உள்ளது. இதனால் மேற்கூறிய இடங்களில் வசிக்கும் மக்கள் நாளை காலை 9 மணிக்கே மின்சாதனங்களை வைத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளை முடித்து விடுவது நல்லது'' என்று கூறப்பட்டுள்ளது.