- Home
- Tamil Nadu News
- சென்னை
- பரபரக்கும் தலைநகரம்! அதிகாலையிலேயே சென்னையில் அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை! பின்னணி என்ன?
பரபரக்கும் தலைநகரம்! அதிகாலையிலேயே சென்னையில் அதிரடி சோதனையில் அமலாக்கத்துறை! பின்னணி என்ன?
சென்னையில் வரி ஏய்பு புகார் தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர், தங்க நகை மொத்த வியாபாரி வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

அமலாக்கத்துறை அதிகாரிகள்
தமிழகத்தில் வரி ஏய்வு மற்றும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையின் அமலாக்கத்துறை அவ்வப்போது சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த வாரம் சென்னை அடையாறு காந்தி நகரில் மருத்துவர் இந்திரா, மேற்கு மாம்பலத்தில் தொழிலதிபர் சுப்பிரமணியன், வேளச்சேரியில் தொழில் அதிபர் பிஷ்னோய் என்பவரது வீடு உள்ளிட்ட சென்னையில் 5 இடங்களில் அவரது வீட்டின் முன் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை
அரியானா மாநிலத்தில் நடந்து வரும் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தொழிலதிபர் வீட்டில் அமலாக்கத்துறை
இந்நிலையில் சென்னையில் சைதாப்பேட்டையில் தொழிலதிபர் ராமகிருஷணன் வீட்டில் 3 வாகனங்களில் சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது MARG லிமிடெட் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதேபோல் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை மொத்த வியாபாரம் செய்யும் மோகன்லால் காத்ரி வீட்டிலும் சோதனையான நடைபெறுகிறது. தலைநகர் சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்த சோதனையானது வரி ஏய்பு புகாரின் அடிப்படையில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.