- Home
- Tamil Nadu News
- என்னால தான் அவன் செத்தான்! அவ போன இடத்துக்கு நான் போயிர்றேன்! இப்படியும் ஒரு காதலா!
என்னால தான் அவன் செத்தான்! அவ போன இடத்துக்கு நான் போயிர்றேன்! இப்படியும் ஒரு காதலா!
ஸ்ரீபெரும்புதூர் அருகே காதல் தகராறில் காதலன் தற்கொலை செய்துகொண்டார். இதனால் மனமுடைந்த பள்ளி மாணவியான காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சோக சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூபதி
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்துள்ள கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் பூபதி (21). இவர் அதே பகுதியை சேர்ந்த பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி வெளியிலும் செல்வது மட்டுமல்லாமல் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.
பள்ளி மாணவியுடன் காதல்
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி பூபதிக்கும், மாணவிக்கும் திடீரென தகராறு ஏற்பட்டு இது வாக்குவாதம் முற்றியது. இதனால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவி இனிமேல் எனக்கு நீ தேவையில்லை. நான் உன்னை பார்க்க மாட்டேன், பேசமாட்டேன். நான் உன்னை காதலிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். ஆசை ஆசையாய் காதலித்த காதலி அப்படி சொல்லிவிட்டாலே என்ற மன வருத்தத்தில் பூபதி இருந்துள்ளார். குடும்பத்தில் யாரிடமும் பேசாமலும் இருந்துள்ளார்.
தூக்கிட்டு தற்கொலை
இந்நிலையில் கடந்த 11-ம் தேதி இரவு 7 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை கண்ட பெற்றோர் அழுது கதறி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் பூபதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கோபத்தில் தான் பேசியதால் பூபதி தற்கொலை செய்து கொண்டார் என மாணவி கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் மாணவியின் பெற்றோர் எழுந்து பார்க்கும் போது மாணவி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனை சற்றும் எதிர்பாராத பெற்றோர் அலறி கூச்சலிட்டனர்.
ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் விசாரணை
அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க விரைந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காதலன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியும் விபரீத முடிவு எடுத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.