அட! விராட் கோலிக்கே பிடிச்சது நம்ம சிம்பு பாட்டு தானாம்! எந்த 'சாங்' தெரியுமா?
விராட் கோலி நடிகர் சிம்புவின் படத்தில் இடம்பெற்ற பாடலை, தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

Virat Kohli's favorite Simbu song: இந்திய கிரிக்கெட் மட்டுமின்றி, உலக கிரிக்கெட்டையும் ஆள்பவர் கிரிக்கெட் கிங் எனப்படும் விராட் கோலி. கிரிக்கெட்டில் விராட் கோலி செய்யாத சாதனைகளே இல்லை எனலாம். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று விட்டாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் தொடர்ந்து கலக்கி வருகிறார் விராட் கோலி. நடப்பு ஐபிஎல் தொடரில் 'ரன் மெஷின்' போன்று ரன்களை குவித்து வரும் விராட் கோலி இதுவரை 10 போட்டிகளில் 6 அரைசதங்களுடன் 443 ரன்கள் குவித்துள்ளார்.
Virat Kohli's favorite song
ஐபிஎல் தொடரில் அசத்தும் ஆர்சிபி
விராட் கோலியின் மிகச்சிறப்பான பேட்டிங்கால் ஆர்சிபி அணியும் புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் வீற்றிருக்கிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள ஆர்சிபி 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்றிருக்கிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தொடர் வெற்றிகளை குவித்து வரும் நிலையில், இந்த முறை கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று முதன்முறையாக கோப்பையை கைப்பற்றும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
விராட் கோலிக்கு பிடித்த தமிழ் பாடல்
இந்நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நிறுவனத்துக்கு பேட்டியளித்த விராட் கோலி, தனது கிரிக்கெட் வாழ்க்கை, ஐபிஎல் அனுவம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மனம்திறந்து பேசியுள்ளார். இந்த பேட்டியின்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் அவரிடம் உங்களுக்கு பிடித்த பாடல் எது? என்று கேட்கிறார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, ''இந்த பதில் உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். எனக்கு தற்போது மிகவும் பிடித்த பாடல், "நீ சிங்கம் தான்" என்று கூறியுள்ளார்.
Virat Kohli and Simbhu
'நீ சிங்கம்தான்' பாடல்
அதாவது விராட் கோலி, நடிகர் சிம்புவின் "பத்து தல" படத்தில் இடம்பெற்ற "நீ சிங்கம்தான்" பாடலை தான் தனக்கு மிகவும் பிடித்த பாடல் என்று கூறியுள்ளார். பாடலாசிரியர் விவேக் வரிகளில், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "நீ சிங்கம்தான்" பாடல் ஏற்கெனவே இந்தியா முழுவதும் செம ஹிட் ஆனது. இப்போது விராட் கோலியே இந்த பாடலை கேட்கிறேன் என கூறியுள்ளதன் மூலம் இந்த பாடல் இந்தியா முழுவதும் வைரலாகி வருகிறது.
நெகிழ்ந்துபோன சிம்பு
விராட் கோலியின் இந்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள சிம்பு, 'நீ சிங்கம் தான்' என்று கூறி பாராட்டு மழை பொழிந்துள்ளார். ஒரு தமிழ் பாட்டை தனக்கு மிகவும் பிடிக்கும் என்று விராட் கோலி கூறியுள்ளது விராட் கோலி ஆர்சிபி ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 'நீ சிங்கம் தான்' என்ற பாடலின் பின்னணியில் விராட் கோலிக்கு வீடியோ வெளியிட்டு ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவிக்கின்றனர்.
Dhoni and Virat kohli
தோனிக்கு ஒலிபரப்பு செய்யப்படும் பாடல்
சிஎஸ்கே கேப்டன் எம் எஸ் தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது நீ சிங்கம் தான்' பாடல் அடிக்கடி ஒலிபரப்பப்படும். இப்போது கோலியே இந்த பாடலை பிடித்துள்ளது என கூறியிருப்பது சிஎஸ்கே ரசிகர்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.