- Home
- Sports
- IND vs ENG 2nd ODI: விராட் கோலி மீண்டும் கம்பேக்; ஜெய்ஸ்வால் நீக்கம்; ரசிகர்கள் விமர்சனம்!
IND vs ENG 2nd ODI: விராட் கோலி மீண்டும் கம்பேக்; ஜெய்ஸ்வால் நீக்கம்; ரசிகர்கள் விமர்சனம்!
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஓடிஐயில் விராட் கோலி களமிறங்கினார். ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

IND vs ENG 2nd ODI: விராட் கோலி மீண்டும் கம்பேக்; ஜெய்ஸ்வால் நீக்கம்; ரசிகர்கள் விமர்சனம்!
இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடர் நடந்து வருகிறது. நாக்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி ஒடிசாவின் கட்டாக்கில் இன்று தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்யும் என அறிவித்தார்.
இந்திய அணி தரப்பில் முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். முதல் போட்டியின் மூலம் ஓடிஐயில் அறிமுகமான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இதேபோல் நீண்ட இடைவெளிக்கு பிறகு விளையாடிய குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு, தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார்.
விராட் கோலி
இந்த போட்டியின்மூலம் வருண் சக்கரவர்த்தி ஓடிஐயில் அறிமுகமாகியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் 15 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி தொடர் நாயகன் விருது வென்றார். இதனால் அவருக்கு ஓடிஐ அணியிலும் இடம் கிடைத்துள்ளது. மேலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இவரை விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
SA20: தென்னாப்பிரிக்காவிலும் MI ஆதிக்கம்; கோப்பையை தட்டித்தூக்கிய MI கேப் டவுன்!
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
2வது ஓடிஐக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா மற்றும் முகமது ஷமி.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜோப்ரா அர்ச்சர் நீக்கப்பட்டு மார்க் வுட் சேர்க்கப்பட்டுள்ளார். 2வது ஓடிஐக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜேக்கப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், மார்க் வுட், சாகிப் மஹ்மூத் மற்றும் பில் சால்ட்.
ரசிகர்கள் விமர்சனம்
இந்திய அணியில் விராட் கோலி வருகைக்காக ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ''ஜெய்ஸ்வால் கடந்த போட்டியில் தான் அறிமுகமாகியுள்ளார். மேலும் அவர் சாம்பியன்ஸ் டிராபியிலும் முக்கியமான வீரர். பிறகு ஏன் அவரை நீக்கினீர்கள்? சுப்மன் கில் அல்லது கே.எல்.ராகுலுக்கு ஓய்வு கொடுத்து விட்டு ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கலாமே'' என ரசிகர்கள் கருத்துகளை கூறி வருகின்றனர்.
பாகிஸ்தான் மைதானத்தின் மோசமான நிலை: தலையில் பலத்த அடி; ரத்த வெள்ளத்தில் சரிந்த சிஎஸ்கே வீரர்!