கண்கவர் மின்னொளியில் மின்னும் டோக்கியோ ஒலிம்பிக் கிராமம்..!
டோக்கியோவில் வரும் 23ம் தேதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் நடக்கவுள்ள நிலையில், டோக்கியோ ஒலிம்பிக் கிராமத்தை ஒரு விசிட் அடிப்போம்.
டோக்கியோவில் உள்ள ஹருமி மாவட்டத்தில் 44 ஏக்கரில் அமைந்துள்ளது ஒலிம்பிக் கிராமம்.
கொரோனா அச்சுறுத்தலால் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வருகை தரும் 18,000 வீரர்கள் மற்றும் அதிகாரிகள் யாரும் இந்த ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது. விளையாட்டு வீரர்கள் மற்றும் அணிகளின் நலன் கருதி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்போதிலும், ஒலிம்பிக் கிராமத்தில் ஒருசிலருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பொதுவாக, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் நடக்கும் ஒலிம்பிக் திருவிழா, இம்முறை பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாததாலும், வீரர்களும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதாலும் ஒலிம்பிக் கிராமம் களையிழந்து காணப்படுகிறது.
ஒலிம்பிக் கிராமத்திற்குள் பயணிக்க, டிரைவர் இல்லாத வாகனம்.
இந்தியாவிலிருந்து 126 விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்ள டோக்கியோ சென்றுள்ள நிலையில், ஒலிம்பிக் கிராமத்தில் இந்தியா உட்பட அனைத்து நாட்டு விளையாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர்.