SRH vs PBKS: அபிஷேக் சர்மா துண்டுச்சீட்டில் எழுதியிருந்தது என்ன? ஏன் இப்படி கொண்டாடினார்?
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் அபிஷேக் சர்மா ஒரு துண்டுச்சீட்டை எடுத்து ரசிகர்களிடம் எடுத்து காண்பித்தார். அதில் என்ன எழுதியிருந்தது? ஏன் இப்படி கொண்டாடினார்? என்பது குறித்து பார்க்கலாம்.

Abhishek Sharma Hundred Paper Celebration: ஐபிஎல் தொடரில் ஹைதராபாத்தில் நேற்று நடந்த பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 245 ரன்கள் குவித்தது. ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்தில் 82 ரன்கள் அடித்தார். பின்பு இமாலய இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 18.3 ஓவர்களில் 2 விக்கெட் மட்டுமே இழந்து 247 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
Abhishek Sharma, SRH vs PBKS
தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 37 பந்தில் 9 பவுண்டரி, சிக்சர்களுடன் 66 ரன்கள் எடுத்தார். மற்றொரு தொடக்க வீரர் அபிஷேக் சர்மா சிக்சர் மழை பொழிந்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியின் பவுலர்களை புரட்டியெடுத்த அவர் வெறும் 55 பந்தில் 141 ரன்கள் அடித்து அனைவரையும் மிரள வைத்தார். மொத்தம் 14 பவுண்டரிகளையும், 10 சிக்சர்களையும் அவர் நொறுக்கியுள்ளார்.
அபிஷேக் சர்மாவில் இந்த நம்பமுடியாத ஆட்டம் தொடர் தோல்வியின் பாதையில் இருந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அசாத்திய வெற்றி பெற வைத்துள்ளது. இந்த போட்டியில் அபிஷேக் சர்மா வெறும் 40 பந்துகளில் சதத்தை எட்டினார். அவர் தனது சதத்தை வித்தியாசமாக கொண்டாடினார். அதாவது அவர் தனது பாக்கெட்டில் இருந்த துண்டுச்சீட்டை எடுத்து ரசிகர்களுக்கு காண்பித்தனர்.
பஞ்சாப்பை பஞ்சு பஞ்சாக்கிய அபிஷேக் சர்மா – முதல் சதம் அடித்து வரலாற்றில் இடம் பிடித்த அபி!
SRH vs PBKS, Cricket
அந்த துண்டுச்சீட்டில் 'This one is for Orange Army' (ஆரஞ்சு ஆர்மி ரசிகர்களே, இது உங்களுக்காகத்தான்) என எழுதப்பட்டிருந்தது. இதை பார்த்ததும் ஹைதரபாத் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத அணி நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்றது. அதனை தொடர்ந்து 4 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. இதனால் அந்த அணியின் ரசிகர்கள் விரக்தியில் துவண்டுபோய் இருந்தனர்.
அவர்களை உற்சாகம் ஊட்டுவதற்காக அபிஷேக் சர்மா துண்டுச்சீட்டில் எழுதி இப்படி காண்பித்துள்ளார். தான் இந்த போட்டியில் சதம் அடிக்கும் எண்ணத்தில் உறுதியாக இருந்த அவர் முன்கூட்டியே துண்டுச்சீட்டில் வாசகதை எழுதி அதை கையோடு கொண்டு வந்துள்ளார். கிரிக்கெட் விதிகளை பொறுத்தவரை வீரர்கள் இப்படிபட்ட கொண்டாட்டத்தில் ஈடுபடுவது எந்தவித தவறும் இல்லை என கூறப்படுகிறது.
IPL 2025, Sports News Tamil
பலம்வாயந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் பார்முக்கு திரும்பியுள்ளதை அந்த அணி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய அபிஷேக் சர்மா, ''எங்கள் அணியில் பேட்டர்கள் சரியாக விளையாடவில்லை என்றாலும் இனிமையான சூழல் நிலவியது. இன்று எங்களுக்கு சிறப்பக்குரிய நாளாக அமைந்து விட்டது. இந்த வெற்றி மிகவும் சிறப்பு வாய்ந்தது, ஏனென்றால் தொடர் தோல்வியை நான் முறியடிக்க விரும்பினேன். தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் தோல்வி அடைவது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் நாங்கள் அணியில் இதைப் பற்றி ஒருபோதும் பேசவில்லை. யுவராஜ் சிங் மற்றும் சூர்யகுமார் யாதவ்க்கு இது ஒரு சிறப்பு குறிப்பு. அவர்கள் இருவரும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள்'' என்றார்.
ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங்கில் சொதப்பி தள்ளிய குஜராத் – விட்டு பிடிச்ச ரிஷப் பண்ட் அண்ட் கோ!