- Home
- Sports
- Sports Cricket
- ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங்கில் சொதப்பி தள்ளிய குஜராத் – விட்டு பிடிச்ச ரிஷப் பண்ட் அண்ட் கோ!
ஓபனிங் நல்லா இருந்தாலும் பினிஷிங்கில் சொதப்பி தள்ளிய குஜராத் – விட்டு பிடிச்ச ரிஷப் பண்ட் அண்ட் கோ!
Shubman Gill, LSG vs GT IPL 2025 : லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் டைட்டன்ஸ் அதிரடியாக விளையாடி 180 ரன்கள் குவித்துள்ளது.

Lucknow, Ekana Cricket Stadium, Aiden Markram
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ்
Shubman Gill, LSG vs GT IPL 2025 : ஐபிஎல் 2025 தொடரின் 26ஆவது லீக் போட்டி தற்போது லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது.
IPL 2025 Points Table, LSG vs GT
சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன்
அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கி தொடக்க முதலே அதிரடியாக விளையாடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 120 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் அதிரடியாக விளையாடி 38 பந்துகளில் ஒரு சிக்ஸர் 6 பவுண்டரி உள்பட 60 ரன்கள் குவித்தது. அடுத்த ஓவரிலேயே சாய் சுதர்சனமும் ஆட்டமிழந்தார்.
Indian Premier League 2025, LSG vs GT IPL 2025
சாய் சுதர்சன் 56 ரன்கள்
சாய் சுதர்சன் 37 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 56 ரன்கள் எடுத்துக் கொடுத்தார். அதன் பிறகு வந்த குஜராத் டைட்டன்ஸ் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதில், ஜோஸ் பட்லர் 16 ரன்கள் எடுக்க, வாஷிங்டன் சுந்தர் 2 ரன்களுக்கு வெளியேறினார். ஷெர்பேன் ரூதர்ஃபோர்டு 22 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ராகுல் திவேதியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
Rishabh Pant, Sai Sudharsan, T20 Cricket
குஜராத் டைட்டன்ஸ் 180 ரன்கள்
இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்தது. குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங் செய்வதைப் பார்த்தால் அந்த அணி 250 ரன்களுக்கு மேல் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்கவே 180 ரன்கள் மட்டும் எடுத்தது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி சார்பில் ஷர்துல் தாக்கூர் மற்றும் ரவி பிஷ்னோய் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். டிக்வேஷ் ரதீ மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
LSG vs GT, Lucknow Super Giants vs Gujarat Titans
இந்த தொடரில் இதுவரையில் குஜராத் டைட்டன்ஸ் விளையாடிய 5 போட்டிகளில் 4 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது விளையாடிய 5 போட்டிகளில் 3 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6ஆவது இடத்தில் உள்ளது.