- Home
- Sports
- பயங்கரவாதத்தை பொறுக்க முடியாது! பாகிஸ்தானுடன் இனி எப்போதும் கிரிக்கெட் கூடாது! சவுரவ் கங்குலி!
பயங்கரவாதத்தை பொறுக்க முடியாது! பாகிஸ்தானுடன் இனி எப்போதும் கிரிக்கெட் கூடாது! சவுரவ் கங்குலி!
பாகிஸ்தானுடன் அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் முறித்துக் கொள்ள வேண்டும் என்று சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Sourav Ganguly urges to break cricket ties with Pakistan: ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் இந்தியா மட்டுமின்றி உலகளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. பயங்கரவாதிகளை வளர்த்து விடும் பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
Sourav Ganguly, Cricket
இந்தியா அதிரடி நடவடிக்கை
பகல்ஹாம் சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு பாகிஸ்தானுக்கு எதிராக பல இராஜதந்திர நடவடிக்கைகளை அறிவித்தது, அதாவது அட்டாரியில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை (ICP) மூடுவது, பாகிஸ்தான் நாட்டவர்களுக்கான SAARC விசா விலக்குத் திட்டத்தை (SVES) நிறுத்தி வைப்பது, பாகிஸ்தான் உடன் செய்து கொண்ட சிந்துநதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்துவது என பல அதிரடி நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டுள்ளது.
சவுரவ் கங்குலி ஆவேசம்
இந்நிலையில்ல் பாகிஸ்தானுடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் இந்திய கேப்டனும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (BCCI) முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி கூறினார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சவுரவ் கங்குலி, ''பாகிஸ்தானுடனான உறவுகளை முறித்துக் கொள்வது 100% முழுமையாக நடக்க வேண்டும். இது தொடர்பாக கடுமையான நடவடிக்கை அவசியம். ஒவ்வொரு ஆண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது நகைப்புக்குரியது அல்ல. பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ள முடியாது. பாகிஸ்தான் உடனான அனைத்து கிரிக்கெட் உறவுகளையும் இந்தியா முறித்துக் கொள்வது அவசியம்'' என்றார்.
சிஎஸ்கே தோல்விக்கு இந்த 3 வீரர்கள் தான் காரணம்! பல கோடிகள் கொட்டியும் பயனில்லை!
India vs Pakistan
இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாடவில்லை
பல ஆண்டுகளாக, இந்தியாவும் பாகிஸ்தானும் ஐசிசி நிகழ்வுகளான T20 மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பைகள், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடர்களில் மட்டுமே நேருக்கு நேர் விளையாடி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு தொடர்கள் ஏதும் நடைபெறவில்லை. இனிமேல் உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் இந்தியா, பாகிஸ்தான் நேரடியாக மோதும் வகையில் போட்டிகள் வைக்க வேண்டாம் என்று ஐசிசிக்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
India vs Pakistan Cricket Match
சாம்பியன்ஸ் டிராபியை துபாயில் விளையாடிய இந்தியா
இரு நாடுகளுக்கும் இடையேயான அரசியல் உறவுகள் காரணமாக, 2008 ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையில் பங்கேற்றதிலிருந்து இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை. 2012-13 ஆம் ஆண்டில் இந்தியாவில் இருதரப்பு தொடரில் கடைசியாக விளையாடியது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியின் போது, இந்தியா பாகிஸ்தானுக்கு பயணிக்கவில்லை; அதற்கு பதிலாக இந்தியா தங்கள் அனைத்து போட்டிகளையும் துபாயில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
17 ஆண்டுகளுக்கு பிறகு SRH முதல் வெற்றி; ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய CSK!