MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • 17 ஆண்டுகளுக்கு பிறகு SRH முதல் வெற்றி; ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய CSK!

17 ஆண்டுகளுக்கு பிறகு SRH முதல் வெற்றி; ஐபிஎல் 2025 தொடரிலிருந்து வெளியேறிய CSK!

IPL 2025 CSK vs SRH : தொடர் தோல்விகளுக்குப் பிறகு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளது. சென்னையில் நடந்த போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் வீழ்த்தியது. 

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Apr 26 2025, 02:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

CSK vs SRH IPL 2025: ஐபிஎல் 2025ல் தொடர் தோல்விகளால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயம். இந்த சூழலில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

இந்த ஐபிஎல் தொடரில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் அணி எட்டு போட்டிகளில் ஆறு தோல்விகளை சந்தித்தது. எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடனான போட்டி 'டூ ஆர் டை' போட்டியாக மாறியது. இந்த முக்கியமான போட்டியில் தோனியின் சென்னை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. சென்னையில் ஹைதராபாத் அணி பெற்ற முதல் வெற்றி இது. சரியான நேரத்தில் கிடைத்த வெற்றி. இதனால் எஸ்ஆர்ஹெச் பிளேஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. சென்னை அணி வெளியேறியது. 

 

37

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. எஸ்.கே. ரஷீத் கோல்டன் டக்காக வெளியேறினார். முகமது ஷமி முதல் விக்கெட்டை வீழ்த்திய பிறகு, சாம் கர்ரனும் அதே பாதையில் சென்றார். 17 வயது ஆயுஷ் 19 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். டெவால்ட் பிரெவிஸ் அறிமுக போட்டியில் 25 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 154 ரன்கள் எடுத்தது. ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ், ஜெய்தேவ் உனத்கட் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

47

எளிதான இலக்கை துரத்திய ஹைதராபாத் அணிக்கு சென்னை அணி கடும் போட்டியை கொடுத்தது. அபிஷேக் சர்மா இரண்டாவது பந்திலேயே ஆட்டமிழந்தார். இஷான் கிஷன், டிராவிஸ் ஹெட் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தொடக்கப் போட்டிக்குப் பிறகு சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்திய இஷான் கிஷன் 34 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஹைதராபாத் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். கமிந்து மெண்டிஸ் (32 ரன்கள்), நிதீஷ் குமார் ரெட்டி (19 ரன்கள்) ஆகியோரின் பங்களிப்பால் 8 பந்துகள் மீதமிருக்கையில் 155 ரன்கள் எடுத்து எஸ்ஆர்ஹெச் வெற்றி பெற்றது.

57

இந்த சீசனில் ஹைதராபாத் அணிக்கு இது மூன்றாவது வெற்றி. இதனால் புள்ளிப்பட்டியலில் 8ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 9வது இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் 10வது இடத்திலும் உள்ளன. முதல் இரண்டு இடங்களில் குஜராத் டைட்டன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் உள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேஆஃப் சுற்றுக்குள் நுழைய மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். நல்ல ரன் ரேட்டும் அவசியம்.

67

இதுவரையில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளன. இதில் 5 முறை தோல்வியை தழுவிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதல் முறையாக வெற்றியை பெற்றுள்ளது. அதே போன்று சேப்பாக்கத்தில் ஒரு சீசனில் அதிக தோல்விகளை சென்னை சூப்பர் கிங்ஸ் பெற்றுள்ளது. 2008ல் 7 போட்டிகளில் 4ல் தோல்வியை சந்தித்துள்ளது.

 

77

இதே போன்று 2012 ஆம் ஆண்டு இறுதிப் போட்டி உள்பட 10 போட்டிகளில் விளையாடிய நிலையில் 4 தோல்விகளை சந்தித்துள்ளது. அதே போன்று தான் 2025 ஆம் ஆண்டு சீசனும் இதுவரையில் சொந்த மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடிய சிஎஸ்கே 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்த சிஎஸ்கே கிட்டத்தட்ட இந்த சீசனிலிருந்து வெளியேறியவிட்டது. ஆனால், இன்னும் அதிகாரப்பூரமாக அறிவிக்கவில்லை.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் 2025
எம். எஸ். தோனி
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்தியன் பிரீமியர் லீக்
ஐபிஎல்
ஐபிஎல் 2025 பிளேஆஃப் அணிகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2026: இ-சிகரெட் முதல் போன் வரை.. வீரர்களுக்கு பிசிசிஐ போட்ட செக்! இனி இதுக்கெல்லாம் தடா!
Recommended image2
yuzvendra chahal: விமானத்தில் சாஹல் செய்த விபரீதம்: சிக்கிய வீடியோ... முடிவுக்கு வரும் கிரிக்கெட் வாழ்க்கை?
Recommended image3
Dhoni's Future: தோனி 2026 IPL-ல் விளையாடுவது கஷ்டம்; CSK சொதப்பினால் மட்டுமே வாய்ப்பு - அஷ்வின்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved