ஷ்ரேயாஸ் மாஸ் கம்பேக்; ஜடேஜா ரிக்கார்டு; முதல் ஓடிஐயில் இந்தியாவின் பலம்? பலவீனம் என்ன?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் ஓடிஐயில் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் மற்றும் பலவீனம் குறித்து பார்க்கலாம்.

ஷ்ரேயாஸ் மாஸ் கம்பேக்; ஹர்ஷித் ராணா கலக்கல்; முதல் ஓடிஐயில் இந்தியாவின் பலம்? பலவீனம் என்ன?
இந்தியா-இங்கிலாந்து இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் நேற்று நடந்தது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் படலர் (52 ரன்), ஜேக்கப் பெத்தல் (51 ரன்) சூப்பர் அரைசதம் விளாசினார்கள்.
இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினார். இதேபோல் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களும், முகமது ஷமி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்பு எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா (2 ரன்), தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (15 ரன்) ஏமாற்றினார்கள்.
ஹர்ஷித் ராணா
அதிரடியில் பட்டைய கிளப்பிய ஷ்ரேயாஸ் ஐயர் 9 பந்தில் 2 சிக்சர்களுடன் 36 பந்தில் 59 ரன்கள் அடித்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 96 பந்தில் 87 ரன்கள் எடுத்தார். இதேபோல் அக்சர் படேல் 47 பந்தில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். சுப்மன் கில் ஆட்டநாயகன் விருது வென்றார்.
ஹர்ஷித் ராணா அசத்தல் ஆட்டம்
இந்த போட்டியின் மூலம் ஓடிஐயில் அறிமுக வீரராக களமிறங்கிய ஹர்ஷித் ராணா, 7 ஓவர்களில் 53 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்துள்ளார். இதுமட்டுமின்றி டெஸ்ட், ஓடிஅ மற்றும் டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அனைத்து போட்டிகளிலும் அவர் தலா 3 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார்.
டி20 கிரிக்கெட்டில் சம்பவம் செய்த ஆண்ட்ரே ரசல்; யாரும் எட்ட முடியாத இமாலய சாதனை!
ரவீந்திர ஜடேஜா
ரவீந்திர ஜடேஜாவின் மைல்கல்
முதல் ஒருநாள் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம், அனில் கும்ப்ளே, ரவிச்சந்திரன் அஸ்வின், ஹர்பஜன் சிங் மற்றும் கபில் தேவ் ஆகியோருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்து வடிவங்களிலும் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய 25வது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்தார். இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் அடில் ரஷீத்தை வீழ்த்தியதன் மூலம் ஜடேஜா இந்த மைல்கல்லை எட்டினார்.
35 வயதான அவர், முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ்வுக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 6000 ரன்கள் மற்றும் 600 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய ஆல்ரவுண்டர் ஆனார். முதல் ஒருநாள் போட்டியில் ரவீந்திர ஜடேஜா 9 ஓவர்களில் 2.90 என்ற எகானமி விகிதத்தில் 26 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
ஷ்ரேயாஸ் ஐயர்
ஷ்ரேயாஸ் ஐயர் மாஸ் கம்பேக்
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 163.89 ஸ்ட்ரைக் ரேட்டில் 59 ரன்கள் எடுத்து அசத்தினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய அவர் முதல் போட்டியிலேயே மாஸ் காட்டி இருக்கிறார்.விஜய் ஹசாரே டிராபியில் மும்பைக்காக இரண்டு சதங்கள் உட்பட 325 ரன்கள் குவித்ததால் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி சாதித்துள்ளார்.
ரோஹித் சர்மா
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இரண்டு ரன்களுக்கு ஆட்டமிழந்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான ஃபார்ம் தொடர்கிறது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் 6.2 சராசரியாக 31 ரன்கள் மட்டுமே எடுத்த அவரது மோசமான ஆட்டம் இங்கு தொடர்கிறது. ஒருநாள் போட்டிகளில் ரோஹித் சர்மா மீண்டும் ஃபார்முக்கு திரும்புவார் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் மீண்டும் மீண்டும் சொதப்புகிறார். இது இந்திய அணிக்கு பெரும் பலவீனமாக உள்ளது.
IND vs ENG 1st ODI: முதல் ஓடிஐயில் விராட் கோலி ஆப்சென்ட்; இந்திய அணியில் இருந்து நீக்கமா?