IND vs ENG 1st ODI: முதல் ஓடிஐயில் விராட் கோலி ஆப்சென்ட்; இந்திய அணியில் இருந்து நீக்கமா?
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடவில்லை. அவர் கடைசி நேரத்தில் விலகியது ஏன்? என்பதற்கான காரணங்களை பார்க்கலாம்.

IND vs ENG 1st ODI: முதல் ஓடிஐயில் விராட் கோலி ஆப்சென்ட்; இந்திய அணியில் இருந்து நீக்கமா?
இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து இந்தியா-இங்கிலாந்து இடையே 3 போட்டிகள் கொண்ட 50 ஓவர் ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியுள்ளது.
இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் தங்கள் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளதாக அறிவித்தார். இதனால் இந்திய அணி முதலில் பவுலிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஹர்சித் ராணா ஆகியோர் ஓடிஐ கிரிக்கெட்டில் அறிமுக வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
ஷ்ரேயாஸ் ஐயர் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இதேபோல் முகமது ஷமியும் நீண்ட காலத்திற்கு பிறகு ஓடிஐ அணியில் களமிறங்கி இருக்கிறார்.
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ
மேலும் குல்தீப் யாதவ்வும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்திய அணியில் களம் கண்டுள்ளார். சுப்மன் கில், கே.எ.ராகுல், ரவீந்திர ஜடேஜா மீண்டும் ஓடிஐ அணியில் இணைந்துள்ளனர். அதே வேளையில் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய வீரர் விராட் கோலி முதலாவது ஒருநாள் போட்டியில் விளையாடவில்லை. விராட் கோலி முழங்கால் வலியால் அவதிப்படுவதால் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என கேப்டன் ரோகித் சர்மா டாஸ் போடும்போது தெரிவித்தார்.
டி20 தரவரிசை: மிரட்டல் சதத்தால் ஜெட் வேகத்தில் உயர்ந்த அபிஷேக் சர்மா
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ தொடர்
இந்திய அணி பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்ஷித் ராணா.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அனுபவ வீரர் ஜோ ரூட் ஓடிஐ அணிக்குள் வந்துள்ளார். மார்க் வுட்வுக்கு பதிலாக ஷயிப் மம்மூத் சேர்க்கப்பட்டுள்ளார். மற்றபடி டி20 தொடரில் விளையாடிய வீரர்கள் அப்படியே தொடர்கின்றனர்.
இங்கிலாந்து அணி பிளேயிங் லெவன்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜேக்கப் பெத்தேல், ஹாரி ப்ரூக், பிரைடன் கார்ஸ், பென் டக்கெட், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஜோ ரூட், சாகிப் மஹ்மூத் மற்றும் பில் சால்ட்.
ஓடிஐ தொடர் முழுவதையும் ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் தமிழ் வர்ணனையுடன் பார்க்கலாம். மேலும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் போட்டியை கண்டு ரசிக்கலாம். இதேபோல் DD Free Dish இன் DD Sports சேனலிலும் போட்டிகள் ஒளிபரப்பாகும். இந்த ஓடிஐ தொடரில் பங்கேற்கும் இரண்டு அணி வீரர்களையும் இப்போது பார்க்கலாம்.
வெற்றிக் கதை: இந்தியாவில் விளையாட்டுகளை ஆதரித்து நிலைப்பாடுகளை வலுப்படுத்துதல்