'டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதில்லை'; கோலி, கில் மீது வெளிப்படையாக குற்றம்சாட்டிய ஜடேஜா!
ஆஸ்திரேலியா தொடரில் இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்கத் தடுமாறும் நிலையில், அவர்கள் மீது ரவீந்திர ஜடேஜா வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார்.
Jadeja and Virat Kohli
பேட்டிங் படுமோசம்
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் 3 போட்டிகள் முடிந்து விட்டன. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்கும் நிலையில், இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த தொடரில் இந்திய அணியின் பவுலிங் சிறப்பாக இருக்கும் நிலையில், பேட்டிங் படுமோசமாக உள்ளது.
Jadeja Batting
அணியை காப்பாற்றிய ஜடேஜா
குறிப்பாக இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்கத் தடுமாறுகிறார்கள். தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் 2வது இன்னிங்சில் சதம் அடித்ததை தவிர, மற்ற இன்னிங்ஸ்களில் பெரிதாக சோபிக்கவில்லை. விராட் கோலியின் பேட்டிங் மிகவும் மட்டமாக இருக்கிறது. அவுட் சைஸ்ட் ஆப் ஸ்டெம்பு பந்தில் அவுட்டாவதை வழக்கமாக கொண்டிருக்கும் கோலி 10 ரன்களை தாண்ட கூட சிரமப்படுகிறார்.
இதேபோல் இளம் வீரர் சுப்மன் கில்லும் அடிலெய்டு டெஸ்ட்டில் இரண்டு இன்னிங்சையும் சேர்த்து வெறும் 59 ரன்களும், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வெறும் 1 ரன்னும் எடுத்து படுமோசமாக விளையாடி வருகிறார். மேலும் பொறுப்பை சுமக்க வேண்டிய கேப்டன் ரோகித் சர்மாவும் பந்துகளை ஸ்டோக் வைக்கவே தடுமாறுகிறார். 3வது டெஸ்ட்டில் கே.எல்.ராகுல் (84 ரன்கள்), பின்வரிசை பேட்ஸ்மேன் ஜடேஜா (77 ரன்) அரைசதம் அடிக்கவில்லை என்றால் இந்தியா படுதோல்வியை தழுவி இருக்கும்.
கம்பீர் விரக்தி; இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்படும் சுப்மன் கில்? முழு விவரம்!
Ravindra Jadeja and Rohit Sharma
வெளிப்படையாக குற்றச்சாட்டு
இந்திய அணியின் பேட்டிங் மிகவும் பலவீனமாக இருக்கும் நிலையில், 'டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பதில்லை' என்று ரவீந்திர ஜடேஜா வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜடேஜா, ''இந்தியாவிற்கு வெளியே, குறிப்பாக ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்காவில் விளையாடும்போது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுப்பது முக்கியம்.
டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்களை எடுக்கவில்லை என்றால் அல்லது நல்ல தொடக்கத்தை கொடுக்கவில்லை என்றால், நிச்சயமாக லோயர் மற்றும் மிடில் ஆர்டர் மீது அதிக அழுத்தமும் பொறுப்பும் இருக்கும். இந்த போட்டியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன்.
India vs Australia Test
கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பு
ஒரு அணியாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். பேட்டிங் யூனிட்டில் அனைவரும் பங்களித்தால் அணி சிறப்பாக செயல்படும்'' என்று ஜடேஜா கூறியுள்ளார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மீது ஜடேஜா வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல WWE வீரர் 'ரே மிஸ்டீரியோ சீனியர்' திடீர் மரணம்; ரசிகர்கள் ஷாக்; யார் இவர்?