கம்பீர் விரக்தி; இந்திய அணியில் இருந்து தூக்கி எறியப்படும் சுப்மன் கில்? முழு விவரம்!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவனில் சுப்மன் கில் இடம்பெற மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
Shubman Gill
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. அதே வேளையில் 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
பிரிஸ்பேனில் நடந்த 3வது டெஸ்ட் போட்டி இரு தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் வரும் 26ம் தேதி தொடங்குகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் தொடங்குவதால் பாக்ஸிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாயந்ததாகும்.
Shubman Gill Batting
அடுத்த 2 போட்டிகளை இந்த இரண்டு அணிகளில் எது வென்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு சென்று விடும். இதனால் மெல்போர்ன் டெஸ்ட்டில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில், 4வது, 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய தொடரில் சொதப்பி வரும் சுப்மன் கில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. அடிலெய்டு டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 31, இரண்டாவது இன்னிங்சில் 28 ரன்கள் மட்டுமே எடுத்த கில், பிரிஸ்பேன் டெஸ்ட்டில் வெறும் 1 ரன்னில் அவுட்டானார். இதனால் சுப்மன் கில்லை பிளேயிங் லெவனில் சேர்க்க பயிற்சியாளர் கம்பீருக்கு விருப்பம் இல்லை என்றும் கில்லுக்கு பதிலாக சர்ஃபராஸ் கான் அல்லது துருவ் ஜூரல் மிடில் வரிசையில் விளையாடுவார்கள் என தகவல்கள் கூறுகின்றன.
பிரபல WWE வீரர் 'ரே மிஸ்டீரியோ சீனியர்' திடீர் மரணம்; ரசிகர்கள் ஷாக்; யார் இவர்?
India vs Australia Test Series
இதேபோல் மிடில் வரிசையில் மோசமாக பேட்டிங் செய்யும் கேப்டன் ரோகித் சர்மா, மீண்டும் ஒப்பனிங்கில் களமிறங்க வாய்ப்புள்ளதாகவும், ஒப்பனிங் வீரர் கே.எல்.ராகுல் 4வது இடத்தில் களமிறங்கலாம் எனவும் தகவல்கள் உலா வருகின்றன. இதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் களமிறங்க இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா தனது இடத்தில் தொடருவார் என்றும் பாஸ்ட் பவுலர்களை பொறுத்தவரை பும்ரா, ஆகாஷ் தீப், முகமது சிராஜ் என்ற வரிசை அப்படியே தொடரும் எனவும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன. ஆஸ்திரேலிய அணி கடைசி இரண்டு போட்டிக்கான அணியில் ஏற்கெனவே 2 மாற்றங்களை செய்திருந்தது.
India vs Australia 4th Test
முதல் 3 டெஸ்ட் போட்டியில் படுமோசமாக பேட்டிங் செய்த இளம் வீரர் நாதன் மெக்ஸ்வீனி அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இடது கை ஆட்டக்காரரான 19 வயதுடைய சாம் கான்ஸ்டாஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 31 வயதான ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டருக்கும் முதன்முறையாக அணியில் இடம் கிடைத்துள்ளது.
அதிரடி மன்னன் ராபின் உத்தப்பாவுக்கு வந்த திடீர் சிக்கல்: கைது செய்ய களம் இறங்கிய காவல்துறை!!