MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்! ரஃபேல் நடாலுக்கு கெளரவம்! உற்சாகமாக பிரியாவிடை அளித்த ரசிகர்கள்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்! ரஃபேல் நடாலுக்கு கெளரவம்! உற்சாகமாக பிரியாவிடை அளித்த ரசிகர்கள்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ரஃபேல் நடால் கெளரவிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக தான் ஆதிக்கம் செலுத்திய டென்னிஸ் மைதானத்துக்கு வந்தவுடன் ரஃபேல் நடால் கண் கலங்கினார்.

2 Min read
Author : Rayar r
Published : May 26 2025, 12:44 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Rafael Nadal honored at French Open Tennis
Image Credit : google

Rafael Nadal honored at French Open Tennis

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியின் விழாவின் போது கௌரவிக்கப்பட்டார். கிராண்ட் ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிஸில் நேற்று தொடங்கியது. 

ஜூன் 8-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், இத்தாலியின் ஜன்னிக் சின்னர், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் உள்ளிட்ட உலகின் முன்னணி வீரர்கள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்
Image Credit : Getty

டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடால்

இந்நிலையில், பாரிஸில் பிரெஞ்ச் ஓபன் போட்டிகள் நடைபெறும் ரோலண்ட் கரோஸ் ஸ்டேடியத்தில் தொழில்முறை டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்ற ரஃபேல் நடாலுக்கு பிரியாவிடை அளிக்கப்பட்டது. 

பல ஆண்டுகளாக தான் ஆதிக்கம் செலுத்திய டென்னிஸ் மைதானத்தில் ஒரு போட்டியாளராக அல்லாமல் புகழ்பெற்ற ஜாம்பவனாக வந்த ரஃபேல் நடாலுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 

ஆரஞ்சு நிற "மெர்சி ரஃபா" சட்டைகளை அணிந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களால் வரவேற்கப்பட்ட ரஃபேல் நடால், தான் சாதனைகளை குவித்த களிமண் களத்தில் காலடி எடுத்து வைத்தபோது தன்னை அறியாமல் கண்கலங்கினார்.

Related Articles

Related image1
ரஃபேல் நடால் பாவம்.. விம்பிள்டன் காலிறுதியில் வெற்றி பெற்ற நடால் அரையிறுதியில் ஆடுவது சந்தேகம்..?
Related image2
ரஃபேல் நடால் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!!
35
உணர்ச்சி பொங்க பேசிய ​​ரஃபேல் நடால்
Image Credit : Getty

உணர்ச்சி பொங்க பேசிய ​​ரஃபேல் நடால்

தொடர்ந்து ரசிகர்கள் ஆரவாரம் செய்தபோது, ​​ரஃபேல் நடால் கண்ணீரைத் தடுத்து நிறுத்தி, பிரெஞ்சு, ஆங்கிலம் மற்றும் தனது தாய்மொழியான ஸ்பானிஷ் மொழிகளில் உரை நிகழ்த்தினார். அப்போது அவர் ரோலண்ட் கரோஸ் மைதானத்தில் இரண்டு தசாப்த கால வெற்றிகள், பின்னடைவுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை நினைவு கூர்ந்தார்.

 ''கடந்த 20 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் விளையாடிய பிறகு எங்கிருந்து தொடங்குவது என்று எனக்குத் தெரியவில்லை. வெற்றி, தோல்வி ஒரு அங்கம். ஆனால் இங்கு இருக்க வாய்ப்பு கிடைத்த ஒவ்வொரு முறையும் நான் நெகிழ்ச்சியடைந்தேன்'' என்று ​​ரஃபேல் நடால் உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.

45
ரசிகர்கள் ஆராவாரம்
Image Credit : Getty

ரசிகர்கள் ஆராவாரம்

தொடர்ந்து பேசிய ​​ரஃபேல் நடால்,''நன்றி, பிரான்ஸ். நன்றி, பாரிஸ். நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாத உணர்ச்சிகளையும் தருணங்களையும் நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். மிக முக்கியமான இடத்தில் பாராட்டப்படுவது எவ்வளவு மகிழ்ச்சிகரமானது என்பதை நீங்கள் ஒருபோதும் அறிய முடியாது. 

நீங்கள் என்னை ஒரு பிரெஞ்சுக்காரராக உணர வைத்தீர்கள். இனிமேல் உங்கள் முன் என்னால் விளையாட முடியாது. ஆனால் என் இதயமும் என் நினைவுகளும் எப்போதும் இந்த இடத்துடன் இருக்கும்'' என்று கூறியபோது ரசிகர்களின் ஆரவாரத்தால் அந்த இடமே அதிர்ந்தது.

55
ரஃபேல் நடால் சாதனைகள் என்னென்ன?
Image Credit : ANI

ரஃபேல் நடால் சாதனைகள் என்னென்ன?

ஸ்பெயினை சேர்ந்த 38 வயதான ரஃபேல் நடால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொழில்முறை டென்னிஸ் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். 'களிமண் மன்னன்' என அழைக்கப்படும் ​​ரஃபேல் நடால், சுமார் 20 ஆண்டு காலம் களிமண் களத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரே வீரர் ஆவார். 

ஆடவர் ஒற்றையர் பிரிவில் 14 பிரெஞ்சு ஓபன் பட்டங்கள் உள்பட 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரஃபேல் நடால் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
டென்னிஸ்
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
RR vs GT: ராஜஸ்தானை பந்தாடி மாஸாக பைனல் சென்ற குஜராத்! சுப்மன் கில் மிரட்டல் சதம் விளாசி சாதனை!
Recommended image2
Sai Sudharsan: இது என்ன கொடுமை! மீண்டும் 'ஹிட் விக்கெட்'! மோசமான சாதனை படைத்த சாய் சுதர்சன்!
Recommended image3
Pooja Singh: U20 ஆசிய தடகள போட்டியில் தங்க மகள்! 14 ஆண்டு கால சாதனையை தகர்த்தெறிந்த பூஜா சிங்!
Related Stories
Recommended image1
ரஃபேல் நடால் பாவம்.. விம்பிள்டன் காலிறுதியில் வெற்றி பெற்ற நடால் அரையிறுதியில் ஆடுவது சந்தேகம்..?
Recommended image2
ரஃபேல் நடால் டென்னிசில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு!!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved