IPL: மும்பை vs டெல்லி! பிளே ஆஃப்க்கு செல்ல யாருக்கு அதிக வாய்ப்பு? முழு அலசல்!
ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றுக்கான 4வது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்த இரு அணிகளில் யாருக்கு அதிக வாய்ப்பு? என்பது குறித்து பார்ப்போம்.

Mumbai Indians vs Delhi Capitals Playoffs Race
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பிளே ஆஃப் சுற்றின் 4வது இடத்தை பிடிக்கப் போவது எந்த அணி? என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. இந்த 4வது இடத்துக்கான ரேஸில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிடல்ஸ் போட்டி
மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. மும்பை அணியின் நெட் ரன் ரேட் +1.156 என நல்ல நிலையில் இருக்கிறது. டெல்லி கேப்பிடல்ஸ் அணி 12 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 13 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. டெல்லி 0.260 என்ற நெட் ரன் ரேட் வைத்துள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வாழ்வா? சாவா? ஆட்டம்
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் நாளை ஜெய்பூரில் பலப்பரீட்சை நடத்துகின்றன. மும்பையை விட இது டெல்லிக்கு தான் வாழ்வா? சாவா? ஆட்டமாகும். ஏனெனில் நாளை நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றால் 16 புள்ளிகளுடன் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிளே ஆஃப் சுற்றுக்கு சென்று விடும். டெல்லி அணி வெளியேற வேண்டியது தான்.
மும்பைக்கு 2 வாய்ப்புகள் உள்ளன
அதே வேளையில் டெல்லி அணி இனி வரும் இரண்டு போட்டிகளிலும் அதாவது மும்பை மற்றும் பஞ்சாப்புக்கு எதிராக வெற்றி பெற்றால் 17 புள்ளிகளுடன் பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்லும். ஒருவேளை நாளைய போட்டியில் மும்பை தோல்வி அடைந்தாலும் அந்த அணிக்கு மேலும் ஒரு வாய்ப்புள்ளது.
அதாவது அதற்கு அடுத்த பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வி அடைந்து, பஞ்சாபுக்கு எதிராக மும்பை வெற்றி பெற்றால் மும்பை உள்ளே சென்று விடும்.
இரு அணிகளின் தலைவிதி பஞ்சாப் கிங்ஸ் கையில்
ஆனால் இப்படி சுற்றி வளைக்க விரும்பாமல் டெல்லிக்கு எதிரான நாளைய போட்டியில் வெற்றி பெறவே மும்பை இந்தியன்ஸ் அணி விரும்பும். இதில் ஜெயித்தால் எந்த ரிஸ்க்கும் இல்லாமல் உள்ளே சென்று விடலாம். ஆனால் டெல்லிக்கு எதிராக மும்பை தோல்வி அடைந்தால் பின்பு இந்த இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைவது பஞ்சாப் கிங்ஸ் அணியின் கையில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.