IPL: மீண்டும் வேலையை காட்டும் சஞ்சீவ் கோயங்கா! ரிஷப் பண்ட், லக்னோ வீரர்கள் அதிருப்தி?
ஐபிஎல்லில் நேற்று டெல்லிக்கு எதிராக லக்னோ தோற்றபிறகு அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா பேசியது ரிஷப் பண்ட் உள்ளிட்ட வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Lucknow players unhappy with sanjeev koyanga: ஐபிஎல்லில் நேற்று விசாகப்பட்டணத்தில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது. நிகோலஷ் பூரன் 30 பந்தில் 6 பவுண்டரி. 7 சிக்சருடன் 75 ரன்கள் விளாசினார். லக்னோ தரப்பில் மிட்ச்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
Ridhap pant LSG
பின்பு விளையாடிய டெல்லி அணி கடைசி ஓவரின் 3வது பந்தில் டெல்லி அணி 9 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 113/6 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. ஆனால் விப்ராஜ் நிகம், அசுதோஷ் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி டெல்லியை வெற்றி பெற வைத்தனர். விப்ராஜ் நிகம் 15 பந்தில் 39 ரன்கள் அடித்தார். அசுதோஷ் சர்மா 31 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 66 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார்.
இந்த போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரிஷப் பண்ட்டிடம் பேசும் காட்சிகள் வைரலாகி வருகின்றன. ரிஷப் பண்ட் மற்றும் கோயங்கா இருவரின் முகத்திலும் சிரிப்பு இல்லை. அதாவது பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட்டிடம் சஞ்சீவ் கோயங்கா களத்திலேயே பேசியுள்ளார். மேலும் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூம் சென்றும் சஞ்சீவ் கோயங்கா உரையாற்றி இருக்கிறார்.
ரூ.5,000 சம்பாதித்தாலும் போதும்! மனைவி கொடுத்த நம்பிக்கையை பகிர்ந்த வருண் சக்கரவர்த்தி!
rishap pant sanjeev koyanga
இது லக்னோ அணி வீரர்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு அணியின் உரிமையாளர் வீரர்களின் டிரஸ்ஸிங் ரூம் சென்று பேசியதை வெளிநாட்டு வீரர்கள் விரும்பவில்லை என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ஒரு போட்டியில் தோற்றதால் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் (Sanjiv Goenka) களத்தில் வைத்து கே.எல்.ராகுல் அதிருப்தியை சம்பாதித்தார்.
கே.எல்.ராகுலுடன் சஞ்சீவ் கோயங்கா நடந்து கொண்ட விதம் குறித்து கேள்விகள் எழுந்தன. அதனால் தான் இந்த சீசனில் ராகுல் லக்னோ அணியில் இருக்க விரும்பவில்லை. சஞ்சீவ் கோயங்காவின் அணுகுமுறை காரணமாக அவர் லக்னோ அணியை விட்டு வெளியேறினார் என்று தகவல்கள் கூறுகின்றன. நேற்றும் தோல்வி அடைந்த பிறகு ரிஷப் பண்ட்டிடம் சஞ்சீவ் கோயங்கா பேசியதால் பழைய சம்பவங்களை நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.
LSG captain Rishabh Pant
அண்மையில் நடந்த ஏலத்தில் ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு லக்னோ வாங்கியது. அவரை கேப்டனாகவும் ஆக்கியுள்ளனர். ஆனால் நேற்றைய போட்டியில் அவர் செய்த தவறால் லக்னோ அணி தோற்றது. கடைசி ஓவரின் முதல் பந்தில் பந்த் ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவரால் பந்தை பிடிக்க முடியவில்லை. அப்போது டெல்லி 9 விக்கெட்டுகளை இழந்து இருந்தது. அந்த நேரத்தில் விக்கெட் விழுந்திருந்தால் ஆட்டம் முடிந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ஷ்டத்தால் டெல்லி வென்றதாக ரிஷப் பண்ட் பேச்சு! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!