அதிர்ஷ்டத்தால் டெல்லி வென்றதாக ரிஷப் பண்ட் பேச்சு! வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ஐபிஎல்லில் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது. டெல்லி அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றது என ரிஷப் பண்ட் பேசியதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LSG vs DC: Netizens condemn Rishabh Pant: ஐபிஎல்லில் நேற்று விசாகப்பட்டணத்தில் நடந்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 209 ரன்கள் எடுத்தது. மிட்ச்செல் மார்ஷ் 36 பந்தில் 6 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 72 ரன்கள் எடுத்தார். நிகோலஷ் பூரன் 30 பந்தில் 6 பவுண்டரி. 7 சிக்சருடன் 75 ரன்கள் விளாசினார். லக்னோ தரப்பில் மிட்ச்செல் ஸ்டார்க் 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
IPL LSG vs DC, Cricket
இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி ஒரு கட்டத்தில் 13 ஓவர்களில் 113/6 என்ற பரிதாபமான நிலையில் இருந்தது. ஆனால் விப்ராஜ் நிகம், அசுதோஷ் சர்மா மிகச்சிறப்பாக விளையாடி டெல்லியை வெற்றி பெற வைத்தனர். விப்ராஜ் நிகம் 15 பந்தில் 39 ரன்கள் அடித்தார். அசுதோஷ் சர்மா 31 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 66 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளார். கடைசி ஓவரின் 3வது பந்தில் டெல்லி அணி 9 விக்கெட் இழந்து 211 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அசுதோஷ் சர்மா ஆட்டநாயகன் விருது வென்றார்.
இந்த போட்டியில் லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் படுமோசமாக செயல்பட்டார். ஐபிஎல்லில் மிக அதிக தொகையான ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட அவர் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார். மேலும் கேப்டனசியிலும் சரிவர செயல்படவில்லை. அதுமட்டுமின்றி கீப்பிங்கிலும் சொதப்பினார். ஒரு கேட்ச் மற்றும் ஸ்டெம்பிங் வாய்ப்பை கோட்டை விட்டார். அதுவும் கடைசி ஓவரில் டெல்லியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. பவுலர் மோகித் சர்மா பேட்டிங் செய்தார். அப்போது ஈஸியான ஸ்டெம்பிங்கை பண்ட் விட்டு விட்டார். அந்த ஸ்டெம்பிங் செய்து இருந்தால் லக்னோ அணி வெற்றி பெற்று இருக்கும்.
முதல் போட்டியிலேயே டக் அவுட்டான ரூ. 27 கோடி வீரர் ரிஷப் பண்ட்; மீம்ஸில் சிக்கிய பண்ட்!
IPL 2025, CRICKET, SPORTS NEWS TAMIL
இந்த ஆட்டம் முடிந்த பிறகு லக்னோ அணியின் தோல்வி குறித்து பேசிய ரிஷப் பண்ட், ''ஸ்கோர் போர்டில் ரன்கள் போதுமானதாக இருந்தன என்று நான் நினைக்கிறேன். பேட்டர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். நடுவில் நாங்கள் வேகத்தை இழந்திருக்கலாம். ஆனால் இந்த விக்கெட்டில் அது ஒரு நல்ல ஸ்கோர் என்று நான் நினைக்கிறேன். நிச்சயமாக ஒரு அணியாக நாங்கள் ஒவ்வொரு போட்டியிலிருந்தும் நேர்மறையானவற்றை எடுத்துக்கொண்டு அதிலிருந்து கற்றுக்கொள்ள விரும்புகிறோம்'' என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், ''நாம் எவ்வளவு அடிப்படைகளை சரியாகப் பெறுகிறோமோ அவ்வளவு சிறப்பாகச் செய்வோம் என்று நினைக்கிறேன். நாம் அடிக்கடி அடிப்படைகளை சரியாகச் செய்ய வேண்டும். ஸ்டப்ஸி, அசுதோஷ் மற்றும் விப்ராஜ் நிகம் இடையே நல்ல பார்ட்னர்ஷிப்கள் இருந்தன. பந்து எவ்வளவு பழையதாகிறதோ, அவ்வளவு பந்து வீச்சாளர்களுக்கு உதவியாக இருக்கும். ஆனால் நாங்கள் அடிப்படைகளை இன்னும் அதிகமாகச் செய்திருக்கலாம். நாங்கள் அழுத்தத்தை உணர்ந்தோம்.
இது போட்டியின் ஆரம்பம். நாங்கள் அதைச் சரிசெய்து விடுவோம். இந்த ஆட்டத்தில் அதிர்ஷ்டம் ஒரு பெரிய பங்கை வகித்துள்ளது. கடைசி ஓவரில் பந்து அவரது (மோகித் சர்மா) பேடை தாக்கியிருக்காவிட்டால் ஸ்டெம்பிங் வாய்ப்பு இருந்திருக்கும்'' என்றார்.
Rishap Pant, IPL
ஒரு கட்டத்தில் டெல்லி படுதோல்வி தழுவும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விப்ராஜ் நிகம், அசுதோஷ் சர்மா அபாரமான ஆட்டத்தால் வெற்றி பெற்று கொடுத்துள்ளனர். ஆனால் டெல்லி அணி அதிர்ஷ்டத்தால் வெற்றி பெற்றது என ரிஷப் பண்ட் கூறியுள்ளதற்கு டெல்லி அணி ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ''டெல்லி வீரர்கள் உங்களை போன்று டக் அவுட் ஆனது மட்டுமின்றி கேட்ச், ஸ்டெம்பிங்கையும் மிஸ் செய்யவில்லை. அவர்கள் போராடி வெற்றி பெற்றுள்ளனர்'' என்று கருத்துகளை கூறி வருகின்றனர்.
மேட்சுனா இதுதான்; வர்ணனையாளர்களை மன்னிப்பு கேட்க வைத்து டெல்லிக்கு ஹீரோவான அஷூதோஷ் சர்மா!