MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ரூ.5,000 சம்பாதித்தாலும் போதும்! மனைவி கொடுத்த நம்பிக்கையை பகிர்ந்த வருண் சக்கரவர்த்தி!

ரூ.5,000 சம்பாதித்தாலும் போதும்! மனைவி கொடுத்த நம்பிக்கையை பகிர்ந்த வருண் சக்கரவர்த்தி!

இந்திய கிரிக்கெட் வீரர் தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கஷ்டமான காலத்தில் மனைவி கொடுத்த நம்பிக்கையை மனம்திறந்து பகிர்ந்துள்ளார். 

2 Min read
Author : Rayar A
Published : Mar 25 2025, 12:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

varun chakravarthy about his wife Neha Khedeka: தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் முக்கிய வீரராக வலம் வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய பங்கு வகித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி மற்றூம் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Varun Chakravarthy, Cricket, IPL

Varun Chakravarthy, Cricket, IPL

துபாயில் 2021ம் ஆண்டு நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் மோசமாக செயல்பட்டதால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வருண் சக்கரவர்த்தி, இப்போது அதே துபாயில் தான் யாரென்று நிருபித்துள்ளார். இப்போது ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துருப்புச்சீட்டாக உள்ளார். ஆகஸ்ட் 29, 1991 அன்று கர்நாடகாவின் பிதாரில் பிறந்த வருண் சக்கரவர்த்தி கட்டிடக் கலைஞர் வேலையை விட்டு விட்டு கிரிக்கெடுக்கு வந்தார்.

வருண் சக்கரவர்த்திக்கு நேஹா கெடேகர் என்ற மனைவியும், ஆத்மன் என்ற மகனும் உள்ளனர். வருணும், நேஹா கெடேகரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு, இரண்டு வருடங்கள் ஒருவரையொருவர் டேட்டிங் செய்து வந்தனர். ஒருவருகொருவர் உயிராய் நேசித்த இவர்கள் இருவரும் 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் திருமணம் செய்து கொண்டு தங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.

தெலுங்கு படத்தில் அறிமுகமான டேவிட் வார்னர்! ஸ்ரீலீலாவுடன் குத்தாட்டம்! வைரல் வீடியோ!

34
Varun Chakravarthy married life

Varun Chakravarthy married life

ஆனால் அப்போது இந்தியாவில் பரவிய கொரோனா இவர்களின் திருமணத்துக்கு சில மாதங்கள் தடை போட்டது. இதனால் பல மாதங்கள் கழித்து 2020ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி இவர்கள் இருவரும் எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர். சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டில் இந்த தம்பதிக்கு ஆத்மன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. 

இந்நிலையில், கஷ்டமான காலத்தில் மனைவி நேஹா கெடேகர் தனக்கு மிகவும் உறுதுணையாக இருந்ததாக வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ''நாங்கள் இருவரும் காதலித்தபோது எனக்கு வேலை இல்லாததால் நீ என்னை நம்பாதே. என்னை திருமணம் செய்து கொள்ளாதே என்று கூறினேன். ஆனால் அவர் (மனைவி நேஹா கெடேகர்) எனக்கு மிகவும் நம்பிக்கை ஊட்டினார். நீ கிரிக்கெட் விளையாடி ரூ.5,000 அல்லது ரூ.6,000 சம்பாதி. நான் ரூ.15,000 சம்பாதிக்கிறேன். நாம் மேனேஜ் பண்ணிக்கலாம் என்று நம்பிக்கை ஊட்டினார்'' என தெரிவித்துள்ளார்.

44
Varun Chakravarthy-Neha Khedeka

Varun Chakravarthy-Neha Khedeka

வருண் சக்கரவர்த்தியின் மனைவி நேஹா கெடேகர் ஜனவரி 4, 1995 அன்று மும்பையில் பிறந்தார். அவருக்கு மணாலி கெடேகர் மற்றும் கைரன் கெடேகர் என்று இரண்டு உடன்பிறப்புகள் உள்ளனர். கணவர் உலகின் மிகப்பிரலமான வீரராக இருந்தாலும் நேஹா கெடேகர் தனது தனிப்பட்ட வாழ்க்கையை ரகசியமாக வைத்திருக்க விரும்புகிறார். அவரது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் 681 பின்தொடர்பவர்கள் உள்ளனர். புகைப்படம் எடுத்தல், பயணம் செய்தல் மற்றும் கிரிக்கெட் பார்ப்பது ஆகியவை நேஹாவின் பொழுது போக்குகளாக உள்ளன.

இந்தியா திரும்பி வந்திடாதே என மிரட்டினார்கள்! வருண் சக்கரவர்த்தி அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
இந்திய கிரிக்கெட் அணி
ஐபிஎல் 2025
 
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Virat Kohli Records: விராட் கோலி ஓய்வு பெறுவதற்குள் முறியடிக்க வாய்ப்புள்ள 5 சாதனைகள்
Recommended image2
Cristiano Ronaldo : 'CR7' சுல்தான் ஓய்வு.. கால்பந்துக்கு 'குட்பை' சொன்ன 'சூப்பர் ஸ்டார்' கிறிஸ்டியானோ ரொனால்டோ!
Recommended image3
IPL 2027: கலீல் அகமது, எல்லிஸை தூக்கிய SRH... பதிலுக்கு CSK வாங்கிய 2 வீரர்கள்! கடுப்பில் ரசிகர்கள்.. பின்னணி என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved