MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • RCB அணிக்கு திரும்பிய ஜோஸ் ஹேசில்வுட்! கப் கன்பார்ம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

RCB அணிக்கு திரும்பிய ஜோஸ் ஹேசில்வுட்! கப் கன்பார்ம்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆர்சிபி அணியின் பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னதாக அந்த அணியுடன் மீண்டும் இணைந்துள்ளார். 

2 Min read
Author : Rayar r
Published : May 25 2025, 02:48 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Josh Hazlewood Returns to RCB
Image Credit : ANI

Josh Hazlewood Returns to RCB

ஐபிஎல் 2025 சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கி விட்டது. மும்பை இந்தியன்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன. இந்த முறையாவது கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்படும் ஆர்சிபி அணி 13 போட்டிகளில் விளையாடி 8 வெற்றி, 4 தோல்விகளுடன் 17 புள்ளிகள் (+0.225 ரன் ரேட்) பெற்று 3வது இடத்தில் உள்ளது.

24
ஆர்சிபி அணியில் இணைந்த ஜோஸ் ஹேசில்வுட்
Image Credit : ANI

ஆர்சிபி அணியில் இணைந்த ஜோஸ் ஹேசில்வுட்

ஆர்சிபி அணி முதல் 2 இடங்களை பிடிக்க நல்ல வாய்ப்பு கணிந்துள்ளது. அதாவது லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி தோல்வி அடைய வேண்டும். 

இது நடந்தால் ஆர்சிபி முதல் 2 இடங்களை பிடிக்கும். இந்நிலையில், ஆர்சிபி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் மகிழ்ச்சி அடையும் விதமாக அந்த அணியின் முக்கிய பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் அணியுடன் இணைந்துள்ளார்.

Related Articles

Related image1
சில நேரங்களில் தோற்பதும் நல்லது! வாய் விட்ட ஆர்சிபி கேப்டன்! வச்சி செய்யும் ரசிகர்கள்!
Related image2
ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்பும் தேதி அறிவிப்பு! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
34
காயத்தால் அவதிப்பட்ட ஹேசில்வுட்
Image Credit : ANI

காயத்தால் அவதிப்பட்ட ஹேசில்வுட்

ஆர்சிபி அணியின் வெளிநாட்டு வீரர்களான பில் சால்ட், ஜேக்கப் பெத்தேல், லியாம் லிவிங்ஸ்டோன், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், லுங்கி நிகிடி ஆகியோர் ஏற்கெனவே அணியில் இணைந்தனர். ஆனால் அந்த அணியின் துருப்புச்சீட்டாக இருக்கும் பாஸ்ட் பவுலர் ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்பாமல் இருந்து வந்தார். 

தோள் பட்டையில் ஒரு சிறிய காயம் காரணமாக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியிலும், ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியிலும் ஹேசில்வுட் விளையாடவில்லை.

ஆர்சிபி ரசிகர்கள் மகிழ்ச்சி

ஆஸ்திரேலியா சென்ற அவர் மீண்டும் எப்போது இந்தியா திரும்புவார்? என ஆர்சிபி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ஜோஸ் ஹேசில்வுட் மீண்டும் ஆர்சிபி அணியுடன் இணைந்துள்ளார். அவர் ஆர்சிபி அணியுடன் இணையும் வீடியோவை ஆர்சிபி நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

அந்த வீடியோவில் 'ஆர்சிபி ரசிகர்களே! ஐ அம் பேக்' என்று ஹேசில்வுட் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

44
ஆர்சிபி அணிக்கு பெரும் பலம்
Image Credit : ANI

ஆர்சிபி அணிக்கு பெரும் பலம்

ஜோஸ் ஹேசில்வுட் ஆர்சிபி அணிக்கு மீண்டும் திரும்பியது அந்த அணிக்கு மிகப்பெரும் பலமாகும். ஏனெனில் ஹேசில்வுட் இல்லாமல் சிஸ்கே மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக விளையாடிய ஆர்சிபி 200 ரன்களுக்கு மேல் விட்டுக் கொடுத்தது. 

ஜோஸ் ஹேசில்வுட் இல்லாமல் ஆர்சிபி அணியின் பந்துவீச்சு பலவீனம் வெளிப்படையாக தெரிந்தது. இப்போது அவர் வந்து விட்டால் ஆர்சிபி பந்துவீச்சில் மீண்டும் பலம் பெறுகிறது. செவ்வாய்க்கிழமை லக்னோவுக்கு எதிரான போட்டியில் ஜோஸ் ஹேசில்வுட் விளையாட இருக்கிறார்.

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஐபிஎல்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஹாரி ப்ரூக் ருத்ரதாண்டவம்.. மேஜிக் இன்னிங்ஸ்.. பாகிஸ்தானை பந்தாடி செமி பைனல் சென்ற இங்கிலாந்து!
Recommended image2
ஏற்கனவே 3 டக் அவுட் – அபிஷேக் சர்மாவிற்கு திரும்ப திரும்ப வாய்ப்பு கொடுக்க காரணம் என்ன?
Recommended image3
டி20 உலகக்கோப்பை.. பாதியிலேயே வெளியேறிய ரிங்கு சிங்.. ரசிகர்கள் ஷாக்.. என்ன நடந்தது?
Related Stories
Recommended image1
சில நேரங்களில் தோற்பதும் நல்லது! வாய் விட்ட ஆர்சிபி கேப்டன்! வச்சி செய்யும் ரசிகர்கள்!
Recommended image2
ஜோஸ் ஹேசில்வுட் இந்தியா திரும்பும் தேதி அறிவிப்பு! ஆர்சிபி ரசிகர்களுக்கு ஸ்வீட் நியூஸ்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved