அபிஷேக் சர்மா 2வது டி20யில் விளையாடுவதில் சிக்கல்; ரசிகர்கள் ஷாக்; என்ன காரணம்?
இந்திய வீரர் அபிஷேக் சர்மா 2வது டி20 போட்டியில் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது. என்ன காரணம்? மாற்று தொடக்க வீரர் யார்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
India vs England T20
இந்தியா வெற்றி
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயித்த 132 ரன்கள் இலக்கை இந்திய அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து 13 ஓவர்களில் எட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் 23 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு இளம் அதிரடி வீரர் அபிஷேக் சர்மா முக்கிய பங்காற்றினார். அதாவது இங்கிலாந்து பவுலர்களை ஓடவிட்ட அபிஷேக் சர்மா, . 20 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார்.
Abhishek Sharma
அபிஷேக் சர்மா
மார்க் வுட், கஸ் அட்கிஸ்சன் பந்துகளில் சிக்சர் மழை பொழிந்த அபிஷேக் சர்மா, வெறும் 34 பந்துகளில் 79 ரன்கள் எடுத்து அசத்தினார். மொத்தம் 8 சிக்சர்களை அவர் பறக்க விட்டார். 5 பவுண்டரிகளை ஓடவிட்டார். இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் 2வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மாவின் வான வேடிக்கையை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், இன்றைய போட்டியில் அவர் விளையாடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
ND vs ENG T20: 2வது டி20 போட்டியில் இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்; முகமது ஷமி கம்பேக்?
Abhishek Sharma Batting
விளையாடுவதில் சிக்கல்
அதாவது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியின் போது அபிஷேக் சர்மா இடது கணுக்கால் பகுதியில் காயம் அடைந்ததாகவும், இதனால் அவர் இன்றைய 2வது டி20 போட்டியில் விளையாடுவதில் சந்தேகம் தான் எனவும் கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயம் ஏற்பட்டவுடன் அணியின் பிசியோ உடனே காயத்தன்மையை பரிசோதித்தனர். அதன்பிறகு அபிஷேக் சர்மா பயிற்சி செய்யவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
India vs England Series
மாற்று ஒப்பனிங் வீரர் யார்?
இது தொடர்பாக பிசிசிஐ அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் காயத்துடன் அபிஷேக் சர்மா விளையாட பிசிசிஐ ரிஸ்க் எடுக்காது என தகவல் வெளியாகி உள்ளன. அப்படி அபிஷேக் சர்மா இன்றைய ஆட்டத்தில் விளையாடாமல் போனால் அது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாகும். அபிஷேக் சர்மா விளையாடாமல் போனால் சஞ்சு சாம்சனுடன், திலக் வர்மா தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெற்றி வேட்டையை தொடருமா இந்தியா? சென்னையில் இன்று 2வது டி20; தொடங்கும் நேரம் என்ன?