IND vs ENG T20: 2வது டி20 போட்டியில் இந்தியாவின் உத்தேச பிளேயிங் லெவன்; முகமது ஷமி கம்பேக்?
இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை விரிவாக பார்க்கலாம்.
Mohammed Shami
இந்தியா-இங்கிலாந்து டி20 தொடர்
இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
பின்பு விளையாடிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 23 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். அபிஷேக் ஷர்மா அதிரடி அரைசதம் விளாசினார். இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது.
India vs England 2nd T20
இந்திய அணியில் யார்? யார்?
முதல் போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய வீரர்கள் சூப்பர் பார்மில் உள்ளனர். தொடக்க வீரர்கள் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மீண்டும் அதிரடியில் வெளுத்துக்கட்ட காத்திருக்கின்றனர். கடந்த சில போட்டிகளாக சொதப்பி வரும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மீண்டும் பார்முக்கு திரும்புவது அவசியமாகும். ஹர்திக் பாண்ட்யா பேட்டிங், பவுலிங்கில் அசத்த காத்திருக்கிறார்.
முதல் போட்டியில் 3 விக்கெட் வீழ்த்திய வருண் சக்கரவர்த்தி, 2 விக்கெட் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பவுலிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். அக்சர் படேலும், ரவி பிஷ்னோயும் சிறப்பாக பந்து வீசினார்கள். இதேபோல் முதல் போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் சிறப்பாக இருந்தது. 2வது போட்டியில் இந்திய அணியில் யார் யார் விளையாடுவார்கள்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
வெற்றி வேட்டையை தொடருமா இந்தியா? சென்னையில் இன்று 2வது டி20; தொடங்கும் நேரம் என்ன?
India vs England T20 Series
முகமது ஷமி விளையாடுகிறாரா?
இந்திய அணியில் பெரிய மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. முதல் போட்டியில் விளையாடிய அணி அப்படியே தொடரும். நீண்ட காலத்துக்கு பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த முகமது ஷமி, முதல் டி20 போட்டியில் சேர்க்கப்படாதது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஷமி, இன்னும் 100% உடல் தகுதியை எட்டவில்லை என்றும் அவர் முழங்காலில் அடிக்கடி வீக்கம் ஏற்படுவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
Indian Team Playing 11
பிளேயிங் லெவன் எனன்?
இதனால் முகமது ஷமி, இந்த டி20 தொடர் முழுவதும் விளையாட வாய்ப்பில்லை என்றும் அவர் நேரடியாக இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரில் களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை சேப்பாக்கம் ஸ்பினுக்கு உகந்தது என்பதால் அர்தீப் சிங்குடன் மற்றொரு பாஸ்ட் பவுலரை சேர்க்க வாய்ப்பில்லை. 3 ஸ்பின்னர்களுடன் இந்திய அணி விளையாட உள்ளது.
2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உததேச பிளேயிங் லெவன்: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவி பிஷ்னோய்.
ஜஸ்பிரித் பும்ராவை ஓவர்டேக் செய்த ஹர்திக் பாண்ட்யா; புதிய சாதனை! மாஸ் சம்பவம்!