MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • வெற்றி வேட்டையை தொடருமா இந்தியா? சென்னையில் இன்று 2வது டி20; தொடங்கும் நேரம் என்ன?

வெற்றி வேட்டையை தொடருமா இந்தியா? சென்னையில் இன்று 2வது டி20; தொடங்கும் நேரம் என்ன?

இந்தியா இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. பல ஆண்டுகளுக்கு சென்னையில் சர்வதேச டி20 போட்டி நடைபெறுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

2 Min read
Author : Rayar A
| Updated : Jan 25 2025, 08:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India vs England T20

India vs England T20

இந்தியா-இங்கிலாந்து டி20 சீரிஸ் 

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஓடிஐ போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 132 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 

பின்பு விளையாடிய இந்திய அணி 13 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது. 23 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய தமிழ்நாட்டை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையிலான 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
India vs England 2nd T20

India vs England 2nd T20

இந்தியா சூப்பர் பார்ம் 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் 3வது சர்வதேச டி20 போட்டி இதுவாகும். இந்திய அணியில் முதல் போட்டியில் அதிரடி அரை சதம் அடித்த அபிஷேக் சர்மா, ஒரே ஓவரில் 22 ரன்கள் நொறுக்கிய சஞ்சு சாம்சன் சூப்பர் பார்மில் உள்ளனர். முதல் ஆட்டத்தில் ஏமாற்றிய சூர்யகுமார் யாதவ் இன்று அசத்த காத்திருக்கிறார். ஹர்திக் பாண்ட்யா ஆல்ரவுண்டராக ஜொலிக்கிறார். 

பவுலிங்கை பொறுத்தவரை அர்ஷ்தீப் சூப்பராக பந்துவீசினார். முதல் ஆட்டத்தில் 3 விக்கெட் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்ற தமிழ்நாட்டின் வருண் சக்கரவர்த்தி இன்றும் அசத்த ரெடியாக இருக்கிறார். அக்சல் படேல், ரவி பிஷ்னோய் சுழலில் அசத்துகின்றனர். இங்கிலாந்தை பொறுத்தவரை முதல் போட்டியில் இந்திய அணியின் ஸ்பின்னர்களை சமாளிக்க முடியாமல் முடங்கியது. 

2024 ஐசிசி டெஸ்ட் அணி: ரோகித், கோலிக்கு ஆப்பு; 3 இந்திய வீரர்களுக்கு இடம்; கேப்டன் யார்?

34
Gus Atkinson

Gus Atkinson

இங்கிலாந்து அணி எப்படி?

கேப்டன் ஜோஸ் படலர் மட்டும் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். பென் டக்கெட், பில் சால்ட், லிவிங்ஸ்டன், ஹாரி ப்ரூக் என அனைத்து அதிரடி வீரர்களும் இன்று சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவுலிங்கில் ஜோப்ரா ஆர்ச்சர் சிறப்பாக செயல்பட்டாலும் மார்க் வுட் ரன்களை வாரி வழங்குவது பின்னடைவாக உள்ளது. 

சேப்பாக்கம் மைதானம் ஸ்பின்னர்களின் சொர்க்கபுரியாகும். இந்த பிட்ச்சில் பந்து நன்றாக சுழன்று திரும்பும். இதனால் இந்திய அணி முதல் டி20 போட்டியை போன்று அக்சர் படேல், ரவி பிஷ்னோய் மற்றும் வருண் சக்கரவர்த்தி என 3 ஸ்பின்னர்களுடன் விளையாடும். அதே வேளையில் தொடக்கத்தில் பாஸ்ட் பவுலர்களுக்கும் கொஞ்சம் ஸ்விங் கிடைக்க வாய்ப்புள்ளது. 

44
Indian Cricket Team

Indian Cricket Team

பனியின் தாக்கம் இருக்கும் 

இங்கு விளையாடிய 2 போட்டிகளில் இந்தியா ஒன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியும் அடைந்துள்ளது. அதாவது 2012ம் ஆண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியும், 2018ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக வெற்றியும் கண்டுள்ளது. சேப்பாக்கத்தில் கடைசியாக நடந்த 10 ஐபிஎல் போட்டிகளை எடுத்துக் கொண்டால் முதலில் பேட்டிங் செய்த அணி 4 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 6 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 

சென்னையில் பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் 2வது பாதியில் பவுலிங் செய்வது மிகவும் கடினம். ஈரப்பதம் காரணமாக பந்து வழுக்கிக் கொண்டு செல்வதால் ஸ்பின்னர்களுக்கு சரியான ஸ்கிரிப் கிடைக்காது. ஆகவே டாஸ் வெல்லும் அணி  முதலில் பவுலிங் தேர்வு செய்யும் என்பதால் இந்த போட்டியில் டாஸ் முக்கிய பங்கு வகிக்கும்.

இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் உள்பட ஸ்டார் ஸ்போர்ட்ஸ் குழும சேனல்கள் போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாட் ஓடிடி தளத்திலும் போட்டியை கண்டு ரசிக்கலாம். 

ரஞ்சி டிராபி: ரோகித், பண்ட் மீண்டும் சொதப்பல்; தனி ஆளாக ஜொலித்த ஜடேஜா; 12 விக்கெட்!
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Test Cricket : ஒரே ஓவரில் அதிக ரன்கள் கொடுத்த டாப் 5 பவுலர்கள்!
Recommended image2
WTC Points Table: ஆஸ்திரேலியா படுதோல்வியால் இந்தியாவுக்கு சாதகமா? டேட்டா என்ன சொல்கிறது?
Recommended image3
AUS vs Ban 1st Test: டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவை அலற விட்ட வங்கதேசம்.. வரலாற்று சாதனை வெற்றி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved