- Home
- Sports
- IND vs ENG ODI: விராட் கோலிக்காக ஜெய்ஸ்வால் நீக்கம்? 2வது ஓடிஐயில் இந்தியாவின் பிளேயிங் லெவன்!
IND vs ENG ODI: விராட் கோலிக்காக ஜெய்ஸ்வால் நீக்கம்? 2வது ஓடிஐயில் இந்தியாவின் பிளேயிங் லெவன்!
இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது ஒருநாள் போட்டி நாக்பூரில் நடைபெற உள்ள நிலையில், விராட் கோலி மீண்டும் களமிறங்குகிறார். இதனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இடத்துக்கு ஆபத்து எழுந்துள்ளது.

IND vs ENG ODI: விராட் கோலிக்காக ஜெய்ஸ்வால் நீக்கம்?; 2வது ஓடிஐயில் இந்தியாவின் பிளேயிங் லெவன்!
இந்தியா-இங்கிலாந்து இடையே நாக்பூரில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 47.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் படலர் (52 ரன்), ஜேக்கப் பெத்தல் (51 ரன்) சூப்பர் அரைசதம் விளாசினார்கள்.
இந்திய அணி தரப்பில் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஹர்ஷித் ராணா 3 விக்கெட் வீழ்த்தினார். இதேபோல் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்களும், முகமது ஷமி, அக்சர் படேல், குல்தீப் யாதவ் தலா 1 விக்கெட் வீழ்த்தினார்கள். பின்பு எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 38.4 ஓவர்களில் 251 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்திய அணி ஷ்ரேயாஸ் ஐயர் 9 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 பந்தில் 59 ரன்கள் அடித்தார். சிறப்பாக விளையாடிய சுப்மன் கில் 96 பந்தில் 87 ரன்கள் எடுத்தார். இதேபோல் அக்சர் படேல் 47 பந்தில் 52 ரன்கள் எடுத்து அசத்தினார்.
இந்தியா-இங்கிலாந்து ஓடிஐ
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து இடையே 2வது ஒருநாள் போட்டி ஓடிசாவின் கட்டாக்கில் உள்ள பராபதி மைதானத்தில் வரும் 9ம் தேதி நடைபெற உள்ளது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்கு முன் வீரர்கள் பயிற்சி எடுக்க வேண்டியது உள்ளதால் 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் போட்டியில் காயம் காரணமாக விளையாடாத விராட் கோலி 2வது போட்டியில் களமிறங்க வாய்ப்புள்ளது.
ரோஹித்துக்கு அடுத்து! இந்திய அணியின் கேப்டன் பொறுப்புக்காக மல்லுக்கட்டும் 3 வீரர்கள்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
இதனால் இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏனெனில் கே.எல்.ராகுல், முதல் போட்டியில் அசத்திய சுப்மன் கில், ஷ்ரேயேஸ் ஐயர் ஆகியோர் தொடருவார்கள். இதனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான் தனது இடத்தை இழக்க வேண்டும். ஜெய்ஸ்வால் ஆடாதபட்சத்தில் ரோகித் சர்மாவுடன், சுப்மன் கில் ஒப்பனிங்கில் களமிறங்குவார். விராட் கோலி ஒன்டவுனில் களமிறங்குவார்.
வருண் சக்கரவர்த்தி
இதேபோல் முகமது ஷமிக்கு ஓய்வளித்து விட்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு தயாராவதற்காக அர்ஷ்தீப் சிங் 2வது போட்டியில் விளையாடுவார். மேலும் ரவீந்திர ஜடேஜா முதல் போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால் அவருக்கு ஓய்வளித்து விட்டு, இங்கிலாந்து டி20 தொடரில் கலக்கிய தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்தி உள்ளே கொண்டு வரப்படுவார் எனவும் கூறப்படுகிறது.
வருண் சக்கரவர்த்தியை சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வைக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதால், அதற்கு முன்னதாக 2 ஓடிஐ போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது.
2வது ஓடிஐக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா, குல்தீப் யாதவ் மற்றும் அர்ஷ்தீப் சிங்.
ஷ்ரேயாஸ் மாஸ் கம்பேக்; ஜடேஜா ரிக்கார்டு; முதல் ஓடிஐயில் இந்தியாவின் பலம்? பலவீனம் என்ன?