MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • களத்தில் மோதல்: முகமது சிராஜுக்கு மட்டும் அபராதம்; தப்பிய ஹெட்; ஐசிசி செய்தது சரியா?

களத்தில் மோதல்: முகமது சிராஜுக்கு மட்டும் அபராதம்; தப்பிய ஹெட்; ஐசிசி செய்தது சரியா?

2வது டெஸ்ட் போட்டியில் டிராவிஸ் ஹெட், முகமது சிராஜ் இடையே மோதல் உண்டானது. இதனால் முகமது சிராஜுக்கு ஐசிசி 20% அபராதம் விதித்துள்ளது.

2 Min read
Author : Rayar r
| Updated : Dec 10 2024, 07:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India vs australia test series

India vs australia test series

இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது, இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது.  அதே வேளையில் இரு அணிகளுக்கு இடையிலான 2வது பிங் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் விளாசினார். இந்திய வீரர்களின் பந்துவீச்சை விளாசித் தள்ளிய டிராவிஸ் ஹெட் 141 பந்தில் 140 ரன் எடுத்து அவுட் ஆனார். அப்போது அவருக்கும், இந்திய வீரர் முகமது சிராஜுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் ஹாட் டாபிக் ஆக மாறியது. 
 

24
Head vs Siraj

Head vs Siraj

அதாவது அதிரடி சதம் விளாசிய டிராவிஸ் ஹெட் சிராஜின் ஒரே ஓவரில் ஒரு பவுண்டரி, சிக்சர் விளாசினார். ஆனால் அதற்கு அடுத்த பந்திலேயே அவர் சிராஜின் சூப்பர் யார்க்கரில் போல்டானார். அவர் அவுட் ஆன உடன் சிராஜை பார்த்து சில வார்த்தைகளை கூறினார். சிராஜும் பதிலுக்கு கோபமாக 'வெளியே போ வெளியே போ'என்பதுபோல் கோபமாக சைகை காட்டினார். 

பின்பு ஹெட்டும் கோபமாக சிராஜை நோக்கி சில வார்த்தைகளை பேசியபடி சென்றார். இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த டிராவிஸ் ஹெட், ''நான் அவுட் ஆன உடன் சிராஜிடம் நீங்கள் நன்றாக பந்து வீசினீர்கள் என்றுதான் கூறினேன். அவர் அதை தவறாக புரிந்து கொண்டு கோபம் கொண்டார்'' என்று கூறினார்.

 'இது படுமோசம்; இனிமே 'இப்படி' செய்யுங்க'; ரோகித் சர்மாவுக்கு முன்னாள் வீரர்கள் அட்வைஸ்!

34
ICC fines Mohammed Siraj

ICC fines Mohammed Siraj

இதேபோல் இந்த விவகாரம் குறித்து மனம் திறந்து பேசிய முகமது சிராஜ், ''நான் ஹெட் அவுட்டானபோது விக்கெட் எடுத்த சந்தோஷத்தில் கொண்டாடினேன். அவரிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவர் தான் என்னை தவறாக பேசினார். அவர் என்னிடம் நன்றாக பந்துவீசினீர்கள் என்று கூறியதாக சொல்வது பொய்.  ஹெட் என்ன சொன்னார் என்பது அனைவருக்கும் தெரியும். நான் எல்லோரையும் மதிக்கிறேன். மற்ற வீரர்களை அவமரியாதை செய்வது எனது வேலையல்ல. ஆனால் ஹெட் செய்தது எனக்கு பிடிக்கவே இல்லை'' என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், போட்டி நடுவரின் புகாரின்பேரில் இந்த விவகாரத்தை கையில் எடுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) போட்டியின்போது நடத்தை விதிகளை மீறியதற்காக முகமது சிராஜுக்கு ஆட்ட ஊதியத்தில் 20% அபராதம் விதித்துள்ளது. அதே வேளையில் ஹெட்டுக்கு ஐசிசி எச்சரிக்கை மட்டுமே விடுத்துள்ளது. அபராதம் ஏதும் விதிக்கவில்லை. 
 

44
Mohammed siraj bowling

Mohammed siraj bowling

மேலும் இருவரும் மோசமான நடத்தைக்கான டி மெரிட் என்ற புள்ளியை பெற்றுள்ளனர். ஹெட், சிராஜ் இருவருமே வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், இருவருமே போட்டி நடுவரிடம் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் ஹெட்டுக்கு மட்ட்டும் ஏன் ஐசிசி அபராதம் விதிக்கவில்லை என ரசிகர்கள் சிலர் கருத்து கூறி வருகின்றனர்.
 

WTC பைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா? என்ன நடக்க வேண்டும்? பாய்ஸ்ன்ட்ஸ் டேபிள் சொல்வதென்ன?

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ind Vs NZ: மண்ட பத்திரம் பிகிலு.. அகமதாபாத் பிட்ச்.. கப் அடிக்குமா இந்தியா..?
Recommended image2
2027-ல் இந்தியாவுக்கு மரண அடி காத்திருக்கு.. ODI உலகக்கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவது உறுதி.. பாக். கேப்டன் சபதம்
Recommended image3
Sanju Samson: மைதானத்தில் சஞ்சுவின் ஆட்டம்.. கேலரியில் சாருவின் ஆரவாரம்..! இதுவல்லவோ கெமிஸ்ட்ரி..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved