WTC பைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா? என்ன நடக்க வேண்டும்? பாய்ஸ்ன்ட்ஸ் டேபிள் சொல்வதென்ன?
அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்தியா படுதோல்வி அடைந்தது. இதனால் WTC இறுதிப்போட்டியில் இந்தியா செல்வதில் சிக்கல் நிலவுகிறது.
India vs Australia 2nd Test
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2வது பிங் பால் டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் நடந்தது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 180 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்பு முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி 337 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் (141 ரனகள்) விளாசினார். இந்திய தரப்பில் பும்ரா, சிராஜ் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.
WTC FINAL
157 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியாவுக்கு 19 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அந்த அணி அதை விக்கெட் இழக்காமல் சுலபமாக எட்டியது. ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த தோல்வியின் மூலம் இந்த தொடர் 1 1 என சமநிலையில் இருக்கும் நிலையில், இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு (WTC 2023-2025 fiநல்) தகுதிபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. அடிலெய்டு டெஸ்டில் படுதோல்வி அடைந்ததால் WTC புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்தியா 57.29 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு சென்றது.'
பிரிஸ்பேனில் குறி தவறாது'; அடித்துச் சொல்லும் ரோகித்; 3வது டெஸ்ட்டில் இந்த வீரர்கள் மாற்றம்?
WTC Points Table
அதே வேளையில் 2வது இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா 60.71 புள்ளிகளுடன் முதல் இடத்துக்கு சென்று விட்டது. இது ஒருபக்கம் இருக்க தென்னாப்பிரிக்க அணி 59.26 புள்ளிகளுடன் 2வது இடத்தில் அமர்ந்துள்ளது. இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றால் தென்னாப்பிரிக்கா அணி WTC புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்று விடும்.
அப்படி நடந்தால் 2வது இடத்தை பிடிக்க இந்தியா, ஆஸ்திரேலியா இடையே கடும் போட்டி நடக்கும். ஆகையால் WTC இறுதிப்போட்டியில் தகுதிபெற இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மீதருக்கும் 3 போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றால் இந்தியா 64.05 புள்ளிகள் பெற்று எந்த சிரமும் இன்றி WTC இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விடும்.
India vs Australia Test Series
இல்லாவிடில் குறைந்தபட்சம் மீதமிருக்கும் மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற்று ஒன்றை டிரா செய்தால் 60.52 என்ற புள்ளிகள் பெற்று WTC பைனலுக்கு செல்ல இந்தியாவுக்கு வாய்ப்புள்ளது. இந்த மூன்று போட்டிகளில் இந்தியா ஒன்றை தோற்று விட்டாலும் WTC இறுதிப்போட்டியை மறந்துவிட வேண்டியதுதான். ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றாலும் அந்த அணி இறுதிப்ட் போடிக்கு செல்ல வாய்ப்புள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர் தோல்வி: தோனி, கோலியின் சாதனை பட்டியலில் ரோகித் ஷர்மா