IPL: குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவு! அதிரடி வீரர் விலகல்! மாற்று வீரர் யார்?
குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் கிளென் பிலிப்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை பார்க்கலாம்.

Glenn Phillips ruled out of the IPL due to injury: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கோலாகலமாக நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் போட்டிகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன. நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி கலக்கி வருகிறது. இதுவரை 5 போட்டிகளில் 4ல் வெற்றியை ருசித்துள்ள குஜராத் அணி 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்திலும் அந்த அணி அசத்தி வருகிறது.
Glenn Phillip, Gujarat Titans
இந்நிலையில், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் அதிரடி வீரரும், சிறந்த பீல்டருமான கிளென் பிலிப்ஸ் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏப்ரல் 6 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிக்கு எதிரான போட்டியில் பீல்டிங் செய்தபோது இடுப்பு பகுதியில் காயம் அடைந்த கிளென் பிலிப்ஸ், 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி இருக்கிறார்.
குஜராத் அணியில் இருந்தாலும் கிளென் பிலிப்ஸ் ஒருமுறை கூட பிளேயிங் லெவனில் இடம்பெறவில்லை. சன்ரைசர்ஸ் ஹைதராபத்துக்கு எதிரான போட்டியில் ஐந்தாவது ஓவருக்குப் பிறகு மாற்று பீல்டராக களமிறங்கினார். பிரசித் கிருஷ்ணா வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தை அவர் பீல்டிங் செய்து த்ரோ செய்தபோது அவர் உடனடியாக தனது இடுப்பைப் பிடித்துக் கொண்டு கீழே விழுந்தார்.
CSK vs LSG: சாட்டையை கையில் எடுத்த தோனி! 3 வீரர்கள் நீக்கம்! சிஎஸ்கே பிளேயிங் லெவன் இதோ!
IPL 2025, Cricket
உடனடியாக அணியின் பிசியோ வந்து வரை கைத்தாங்கலாக அழைத்து சென்றனர். இந்த நிலையில் தான் காயத்தின் தன்மை பெரிதாக இருப்பதால் கிளென் பிலிப்ஸ் விலகியுள்ளார். இதை ஐபிஎல் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிளென் பிலிப்ஸ்க்கு பதிலாக மாற்று வீரர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. நியூசிலாந்தை சேர்ந்த பிலிப்ஸ் பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் அசத்தக்கூடியவர். மேலும் உலகின் மிகச்சிறந்த பீல்டர்களில் ஒருவரான அவரின் விலகல் குஜராத் அணிக்கு பெரும் பின்னடைவாகும்.
Kagiso Rabada, Sports News in Tamil
ஏற்கெனவே குஜராத் அணியின் பாஸ்ட் பவுலர் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த கசிகோ ரபடா சொந்த காரணங்களுக்காக தாயகம் திரும்பியுள்ளார். அவர் எப்போது திரும்புவார்? என்பது குறித்த தகவல் ஏதும் இல்லை. இந்நிலையில், கிளென் பிலிப்சும் விலகி இருப்பது பெரிய பிரச்சனையாக குஜராத்துக்கு அமைந்துள்ளது.
குஜராத் அணி இந்த சீசனுக்காக 7 வெளிநாட்டு வீரர்களை மட்டுமே வாங்கியிருந்தது. இப்போது அவர்களில் ஜோஸ் பட்லர், ரஷீத் கான் மற்றும் ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட் மட்டுமே அனைத்து போட்டிகளிலும் விளையாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் கரீம் ஜனத் மற்றும் தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி ஆகியோரும் குஜாரத் அணியில் உள்ளனர். ஜெரால்ட் கோட்ஸி காயத்தில் இருந்து மீண்டு வருகிறார்.
காலங்கள் மாறுது! காட்சிகள் மாறுது! மிக மோசமான சாதனை படைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி!
கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.