MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • 'இனி இதை செய்தால் தான் இந்திய அணியில் இடம்'; ரோகித், கோலிக்கு 'செக்' வைத்த கம்பீர்!

'இனி இதை செய்தால் தான் இந்திய அணியில் இடம்'; ரோகித், கோலிக்கு 'செக்' வைத்த கம்பீர்!

ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாடும்படி கோலி, ரோகித் சர்மாவிடம் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Jan 05 2025, 05:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
India vs Australia Test

India vs Australia Test

இந்தியா படுதோல்வி 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் பெர்த்தில் நடந்த முதல் போட்டியில் மட்டும் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் அதன்பிறகு மிக மோசமாக செயல்பட்டது. அடிலெய்டில் நடந்த 2வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மெல்போர்னில் நடந்த 4வது டெஸ்ட்டில் 184 ரன்கள் வித்தியாசத்திலும் சிட்னியில் நடந்த 5வது டெஸ்ட்டில் 6 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி படுதோல்விகள் அடைய முக்கிய காரணம் ரோகித் சர்மா, விராட் கோலியின் படுமோசமான பேட்டிங் தான். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rohit Sharma

Rohit Sharma

கோலி, ரோகித் மோசமான பேட்டிங் 

அணிக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டிய கேப்டன் ரோகித் சர்மா வெறும் 6 சரசாரியுடன் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். கேப்டன்சியிலும் சரியான முடிவுகள் எடுக்க முடியாமல் தடுமாறினார். இதேபோல் முதல் டெஸ்ட்டில் மட்டும் சதம் அடித்த விராட் கோலி, அதன்பிறகு ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. அதுவும் அவுட் சைட் ஆப் ஸ்டெம்ப் பந்தில் அவர் தொடர்ந்து அவுட் ஆனது அதிர்ச்சியை உண்டாக்கியது.

தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் ரோகித் சர்மா, விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். மறுபுறம் இந்திய சீனியர் வீரர்கள் ரஞ்சி கோப்பை போன்ற முதல் தர போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. 

சிட்னி டெஸ்ட்டில் படுதோல்வி; WTC பைனல் வாய்ப்பை இழந்தது இந்தியா; தோல்விக்கு காரணம் என்ன?
 

34
Virat Kohli

Virat Kohli

உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் 

இதே கருத்தை வலியுறுத்திய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், ''இந்திய அணியின் மூத்த வீரர்கள் கண்டிப்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும். அப்படி விளையாடினால் தான் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் எளிதாக ரன்கள் உதவியாக இருக்கும். மூத்த வீரர்கள் கண்டிப்பாக ரஞ்சி கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் சொல்ல வேண்டும்'' என்று தெரிவித்தார்.

இந்நிலையில், சிட்னி டெஸ்ட்டில் தோல்விக்கு பிறகு பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக இந்திய அணி வீரர்கள் ரஞ்சி கோப்பை போன்ற உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடுவார்களா? என்ற கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த கம்பீர், ''எல்லோரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். 

44
goutham gambhir

goutham gambhir

வெளிப்படையாக பேசிய கம்பீர் 

இப்போது உள்நாட்டு கிரிக்கெட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதிகமாக விளையாடக்கூடிய மற்றும் சிவப்பு பந்து கிரிக்கெட்டில் அர்ப்பணிப்பு உள்ள அனைவரும் அதிகமாக உள்நாட்டு கிரிக்கெடில் விளையாட வேண்டும். உள்ளூர் போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காவிட்டால், டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடக்கூடிய வீரர்களை தேர்வு செய்வது கடினமாகும். பெரிய போட்டிகளை எதிர்கொள்ள உள்ளூர் போட்டிகள் பயிற்சியாக இருக்கும்'' என்றார். 

இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்ந்து உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது. 

ரோகித் சர்மாவுக்கு அடுத்த ஷாக்; சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யா? பரபரப்பு தகவல்!
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved