MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • ரோகித் சர்மாவுக்கு அடுத்த ஷாக்; சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யா? பரபரப்பு தகவல்!

ரோகித் சர்மாவுக்கு அடுத்த ஷாக்; சாம்பியன்ஸ் டிராபியில் கேப்டனாகும் ஹர்திக் பாண்ட்யா? பரபரப்பு தகவல்!

சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்க்கலாம். 

2 Min read
Author : Rayar A
Published : Jan 04 2025, 10:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Rohit Sharma

Rohit Sharma

ரோகித் சர்மா நீக்கம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் படுமோசமாக விளையாடி வரும் இந்திய அணி 2 1 என்ற கணக்கில் பின் தங்கியுள்ளது. இந்த தொடர் முழுவதும் படுமோசமாக பேட்டிங் செய்த ரோகித் சர்மா 6 சராசரியுடன் வெறும் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதேபோல் கேப்டன்சியிலும் கடுமையாக சொதப்பினார். இதனால் சிட்னியில் நடக்கும் 5வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ளார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rohit Sharma and Bumrah

Rohit Sharma and Bumrah

சாம்பியன்ஸ் டிராபியில் ஹர்திக் கேப்டன்?

ரோகித் சர்மாவை பிசிசிஐ அதிரடியாக நீக்கியது என ஒரு தரப்பினரும், இல்லை தானே முன்வந்து கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து ரோகித் சர்மா ஒதுங்கினார் என மற்றொரு தரப்பினரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடர் முடிந்தவுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவார் என தகவல்கள் பரவும் நிலையில், ஓடிஐ கிரிக்கெட்டில் இருந்தும் அவரது கேப்டன்சியை பறிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பும்ரா கையில் இந்தியாவின் வெற்றி; நாளை பந்துவீசுவரா? காயத்தின் நிலை என்ன?

34
India vs Australia 5th Test

India vs Australia 5th Test

கேப்டன்சியில் ரோகித்தின் பலவீனம் 

அதாவது அடுத்த மாதம் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபியில் ரோகித் சர்மாவை ஓரம்கட்டி விட்டு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் அணி இக்கட்டான நிலையில் இருந்த நேரத்தில் ரோகித் சர்மா நெருக்கடியை சமாளிக்க முடியாமல் கடும் அழுத்தத்தில் வீழ்ந்தார்.

பீல்டிங் செட் செய்வதிலும், பவுலர்களுக்கு ஓவர்கள் ரொட்டேட் செய்வதிலும் தடுமாறினார். சாம்பியன்ஸ் டிராபியிலும் இதே நிலை தொடர்ந்தால் இந்த அணி கோப்பையை மறந்து விட வேண்டியதுதான் என பிசிசிஐ நினைக்கிறது.

டெஸ்ட் கிரிக்கெட், ஓடிஐ கிரிக்கெட் வேறு வேறு பார்மட் என்றாலும் கேப்டன்சி செய்யும் விதம் ஒன்றுதான் என பிசிசிஐ கருதுகிறது. இதனால் கேப்டன்சியில் பலவீனாக உள்ள ரோகித் சர்மாவை கழட்டி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

44
hardik pandya

hardik pandya

ஹர்திக் பாண்ட்யா தேர்வு ஏன்?

அதே வேளையில் ஹர்திக் பாண்ட்யா இந்திய டி20 அணியையும், ஐபிஎல்லில் குஜராத் அணியையும் நெருக்கடியான நேரத்தில் மிகவும் கூலாக சிறப்பாக வழிநடத்தியுள்ளார். கேப்டன்சி அனுபவம் நன்றாக இருப்பதால் 50 ஓவர் போட்டிகளுக்கு அணியை வழிநடத்த ஹர்திக் பாண்ட்யா சரியான தேர்வாக இருப்பார் என பிசிசிஐ நினைப்பதகாவும் தகவல்கள் உலா வருகின்றன. 

சில போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய சுப்மன் கில்லுக்கு கேப்டன்சியில் போதிய அனுபவம் இல்லை. இப்போது டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் சூர்யகுமார் யாதவ் ஓடிஐ பார்மட்டில் ரன்கள் அடிக்கத் திணறுவதால் இவர்களின் அடுத்த இடத்தில் பிசிசிஐயின் கண்ணில்படுவது ஹர்திக் பாண்ட்யா தான். 

இந்த தகவல் உறுதியாகி சாம்பியன்ஸ் டிராபியில் ஹர்திக் கேப்டனாக செயல்பட்டால் அந்த தொடர் முடிந்தவுடன் ரோகித் சர்மா ஓடிஐ கிரிக்கெட்டில் இருந்தும் விடைபெறுவர் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ''கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற போவதில்லை. கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து தான் நான் விலகியுள்ளேன்'' என்று ரோகித் சர்மா இன்று விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மனைவியை பிரியும் யுஸ்வேந்திரா சாஹல்? இன்ஸ்டாவில் அன்ஃபாலோ செய்ததால் சர்ச்சை!
 

கிரிக்கெட் மற்றும் விளையாட்டு உலகின் (Sports News in Tamil) நிமிட நிமிட தமிழ் செய்தி அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ்-ஐ பின்பற்றுங்கள். IPL லைவ் உட்பட டீம் இந்தியாவின் பிரேக்கிங் நியூஸ் (Cricket News in Tamil), சிறப்பு ரிப்போர்ட்கள் மற்றும் நேரலைகளுடன் முழுமையான தகவல்கள் உங்களுக்கு ஒரே கிளிக்கில் கிடைக்கும். ஏஷ்யாநெட் தமிழ் அதிகாரப்பூர்வ ஆப்பைப் டவுன்லோடு செய்து அனைத்து அப்டேட்களையும் பெறுங்கள்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
சாம்பியன்ஸ் டிராபி
ரோகித் சர்மா
ஹர்திக் பாண்டியா
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
IPL 2027 Auction: ரூ.14 கோடி பிளேயரை கழட்டிவிடும் சிஎஸ்கே.. தோனியின் மாஸ்டர் பிளான்!
Recommended image2
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image3
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved