சர்ச்சைக்குரிய ரன் அவுட்.! நடுவரோடு சண்டையிட்ட சுப்மன் கில் - நடந்தது என்ன.?
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், ஐபிஎல் 2025ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் 76 ரன்கள் எடுத்தார். சர்ச்சைக்குரிய ரன் அவுட்டால் வெளியேறினார். கில்லின் ரன் அவுட் குறித்து ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

குஜராத்- ஹைதரபாத் போட்டி
குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் சுப்மன் கில், ஐபிஎல் 2025ல் தொடர்ந்து அரைசதங்கள் அடித்து அசத்தி வருகிறார். வெள்ளிக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கில்லின் அபார ஆட்டம்
13வது ஓவரில் அன்சாரி பந்துவீச்சில் ஜோஸ் பட்லர் ஷார்ட் ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு அடித்த பிறகு வேகமாக சிங்கிளுக்கு ஓடினார். ஹர்ஷல் படேல் பந்தை ஸ்ட்ரைக்கர் எண்டிற்கு த்ரோ செய்தார். விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசன், ஸ்டம்புகளுக்கு முன்னால் நின்று, தனது கையுறைகளால் பந்தை ஸ்டம்புகளில் பட வைக்க முயன்றார். இந்த ரன் அவுட் சரியாக தெரியாத காரணத்தால் அவுட்டா.? நாட் அவுட்டா என குழப்பம் ஏற்பட்டது. இதனால் நீண்ட நேரம் 3வது நடுவர் எடுத்துக்கொண்டார்.
கில்லின் சர்ச்சையை ஏற்படுத்திய அவுட்
மூன்றாவது நடுவர், கிளாசனின் கையுறைகள் ஸ்டம்புகளைத் தொட்ட பிறகு பந்து ஸ்டம்புகளைத் தொட்டதாக உறுதிப்படுத்தினார். இதனால் அவுட் என அறிவிக்கப்பட்டது. இந்த முடிவால் கில் அதிர்ச்சியடைந்தார், ஆனால் மீண்டும் டக் அவுட்டுக்குச் செல்ல வேண்டியதாயிற்று. பின்னர், டிவி நடுவர் மைக்கேல் கௌத்துடன் கில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சமூக வலைதளங்களில் கில்லின் ரன் அவுட் குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கில் வாக்குவாதம்
ரன் அவுட் ஆன போதிலும், கில் அற்புதமான இன்னிங்ஸை ஆடினார். 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து 25வது ஐபிஎல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். குஜராத் டைட்டன்ஸ் கேப்டன், சாய் சுதர்சனுடன் 87 ரன்கள் தொடக்க பார்ட்னர்ஷிப்பையும், ஜோஸ் பட்லருடன் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப்பையும் அமைத்தார்.
கில்லின் அபார பேட்டிங்
கில்லின் 76 ரன்கள் இன்னிங்ஸில் 10 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் அடங்கும். 200 ஸ்ட்ரைக் ரேட்டில் கில் பேட்டிங் செய்தார். கில் மொத்தமாக 113 ஐபிஎல் போட்டிகளில் (110 இன்னிங்ஸ்) 3,681 ரன்கள் எடுத்துள்ளார். 25 அரைசதங்கள், 4 சதங்கள் அடித்துள்ளார்.