பார்முக்கு திரும்பிய கையோடு புதிய சாதனை படைத்த 'ஹிட்மேன்' ரோகித் சர்மா!
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்த ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Rohit Sharma set a new record in IPL: ஐபிஎல் தொடரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்களில் 217 ரன்கள் குவித்தது. பின்பு விளையாடிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வியை தழுவியது. இந்த போட்டியில் மும்பை இந்தியனஸ் வீரர் ரோகித் சர்மா 36 பந்தில் 53 ரன்கள் எடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கினார்.
Rohit Sharma, IPL
ரோகித் சர்மா புதிய சாதனை
ஐபிஎல் 2025 தொடக்க ஆட்டங்களில் சொதப்பிய ஹிட்மேன் ரோஹித் சர்மா, தற்போது ஃபார்முக்கு திரும்பியுள்ளார். கடந்த 4 போட்டிகளில் 3 அரைசதங்கள் அடித்து அசத்தியுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 5 ஐபிஎல் கோப்பைகளை வென்று கொடுத்த ரோஹித் சர்மா, மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார். மும்பை அணிக்காக 6,000 ரன்கள் எடுத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
Rohit Sharma Record, Cricket
டி20 கிரிக்கெட்டில் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரர் ரோகித் சர்மா ஆவார். இதற்கு முன்பு விராட் கோலி 8871 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். தற்போது ரோகித் சர்மாவும் அந்த பட்டியலில் இணைந்துள்ளார்.
ஒரே அணிக்காக டி20-ல் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள்
- விராட் கோலி: 8871 (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு)
- ரோஹித் சர்மா: 6024 (மும்பை இந்தியன்ஸ்)
- ஜேம்ஸ் வின்ஸ்: 5939 (ஹாம்ப்ஷைர்)
- சுரேஷ் ரெய்னா: 5528 (சென்னை சூப்பர் கிங்ஸ்)
- எம்.எஸ். தோனி: 5269 (சென்னை சூப்பர் கிங்ஸ்)