ஆஸ்திரேலியா அறிவித்த 2024 சிறந்த அணியில் பும்ரா கேப்டன்; மற்றொரு இந்திய வீரருக்கும் இடம்; கம்மின்ஸ் உண்டா?
ஆஸ்திரேலியா அறிவித்த 2024 சிறந்த அணியில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டிராவிஸ் ஹெட் இடமில்லை.
jasprit bumrah Bowling
பும்ரா என்னும் மாவீரன்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளில் படுதோல்வியை சந்தித்த இந்திய அணி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த தொடரில் கிட்டத்தட்ட இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சொதப்பி வரும் நிலையில், ஒரே ஒரு வீரர் மட்டும் ஆஸ்திரேலிய மண்ணில் நான் தான் கிங் என நிரூபித்துள்ளார். அவர் தான் உலகின் நம்பர் 1 பவுலர் ஜஸ்பிரித் பும்ரா.
ஆஸ்திரேலியா தொடர் முழுவதும் இந்தியாவுக்காக தனி ஆளாக போராடி வரும் பும்ரா எதிரணி பேட்ஸ்மேன்களின் கண்களில் விரலை விட்டு ஆட்டி வருகிறார். 4 போட்டிகளில் 30 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். வெளிநாட்டு தொடரில் அதிக விக்கெட் எடுத்த இந்தியர் என்ற பெருமையை பெற்ற பும்ரா, இந்த தொடரில் தனது 200வது விக்கெட்டையும் சாய்த்தார்.
Australia's 2024 Team of the Year
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்த சிறந்த அணி
இளம் வீரர்கள் மட்டுமின்றி மூத்த வீரர்களையும் சொல்லி வைத்து தூக்கும் பும்ரா. ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் எமனாகவே இருக்கிறார். இந்நிலையில், ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ள 2024ம் ஆண்டுக்கான சிறந்த அணியில் பும்ரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 2024ம் ஆண்டு சிறப்பாக விளையாடிய அனைத்து நாட்டு வீரர்களையும் அடிப்படையாக வைத்து 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த உலக லெவன் அணியில் தான் ஐஸ்பிரித் பும்ரா கேப்டனாக இடம்பெற்றுள்ளார். இந்த ஆண்டு 13 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 71 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். அதனால் அவரை ஆஸ்திரேலியா கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த அணியில் பும்ராவை தவிர இந்திய அதிரடி இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் இடம்பெற்றுள்ளார்.
கவுதம் கம்பீர் பயிற்சியில் தள்ளாடும் இந்தியா; அடகொடுமையே! 6 மாதங்களில் இத்தனை தோல்விகளா?
Pat Cummins
பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் இல்லை
மேலும் இங்கிலாந்து அணி வீரர்கள் ஜோ ரூட், பென் டெக்கெட், ஹாரி ப்ரூக் ஆகியோர் பிளேயிங் லெவனில் இடம் பெற்றுள்ளனர். நியூசிலாந்தில் இருந்து ரச்சின் ரவீந்திரா, மேட் ஹென்றி ஆகியோரும், தென்னாப்பிரிக்க வீரர் கேசவ் மகாராஜ், இலங்கையின் குசல் மெண்டிஸ் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் இருந்து அலெக்ஸ் கேரி மற்றும் ஜோஸ் ஹேசில்வுட் ஆகிய 2 பேர் பிளேயிங் லெவனில் இடம்பிடித்துள்ளனர். பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் ஆகியோர் பிளேயிங் வெலனில் சேர்க்கப்படவில்லை.
Harry Brook And Joe Root
பிளேயிங் லெவன் இதுதான்
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அறிவித்த பிளேயிங் வெவனில் பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த ஒரு வீரர்களும் இடம்பெறவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட 2024ல் சிறந்த அணியின் பிளேயிங் லெவன்: ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்),யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், ஜோ ரூட், ரச்சின் ரவீந்திரா,ஜோஷ் ஹேசில்வுட், கேசவ் மகாராஜ், கமிந்து மெண்டிஸ், ஹாரி புரூக், மேட் ஹென்றி மற்றும் அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்).
2024 சிறந்த வீரர்கள் பரிந்துரை பட்டியலில் பும்ரா; அவருடன் ரேஸில் போட்டி போடுவது யார்? யார்?