- Home
- Sports
- பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்! ஷ்ரேயாஸ் சேர்ப்பு! கோலி, ரோகித் எந்த இடம்? யாருக்கு எவ்வளவு சம்பளம்?
பிசிசிஐ ஒப்பந்த பட்டியல்! ஷ்ரேயாஸ் சேர்ப்பு! கோலி, ரோகித் எந்த இடம்? யாருக்கு எவ்வளவு சம்பளம்?
பிசிசிஐ 2024-25 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஷ்ரேயாஸ் ஐயர் மீண்டும் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதன் முழு விவரம், யார் யாருக்கு எவ்வளவு சம்பளம்? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

BCCI Annual Contract: Shreyas Iyer Included – What About Rohit & Kohli?: இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ 2024-25 ஆம் ஆண்டுக்கான ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்திய கிரிக்கெட் வாரியத்தால் அதிக சம்பளம் வாங்கும் வீரர்களாகத் தொடர்கின்றனர். ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷான் ஆகியோர் மீண்டும் பிசிசிஐ ஒப்பந்தத்தில் இடம்பிடித்துள்ளனர்.
BCCI Annual Contract 2025
ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மீண்டும் சேர்ப்பு
கடந்த 2024 ஆம் ஆண்டில், இஷான் கிஷன் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் பிசிசிஐ ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டனர். பிசிசிஐ உத்தரவிட்டும் இவர்கள் இருவரும் உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடாததால் நீக்கப்பட்டனர். இப்போது ஷ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து நல்ல ஃபார்மில் விளையாடினார். மேலும், தேசிய அணியிலும் மீண்டும் இடம் பிடித்தார். சமீபத்தில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்ததும் அவர்தான். மேலும் இஷான் கிஷனும் பிசிசிஐ சொன்னபடி நடந்துள்ளதால் இருவரும் மீண்டும் ஒப்பந்த பட்டியலில் இணைந்துள்ளனர்.
CSK vs MI: தோனி எடுத்த தவறான 3 முடிவுகள்! சிஎஸ்கே தோல்விக்கு இதுதான் காரணம்!
Indian Team, BCCI
மொத்தம் 33 வீரர்களுக்கு இடம்
பிசிசிஐ தனது வருடாந்திர ஒப்பந்தத்தை மொத்தம் 33 வீரர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. ஏ+ பிரிவில் முதல் நான்கு வீரர்கள் அப்படியே உள்ளனர். இதற்கிடையில், கேஎல் ராகுல் மற்றும் முகமது சிராஜ் உட்பட 6 வீரர்கள் கிரேடு ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளனர். இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் 3 வீரர்கள் கிரேடு பி பிரிவில் இடம் பெற்றுள்ளனர். ரிங்கு சிங், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் சர்மா உள்பட 18 வீரர்கள் கிரேடு சி பிரிவில் இடம்பிடித்து இருக்கின்றனர்.
Team India, Cricket
பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் உள்ள வீரர்களின் முழு பட்டியல் இதோ:
கிரேடு A+: ரோகித் சர்மா, விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா
கிரேடு ஏ: முகமது சிராஜ், கே.எல். ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, ரிஷப் பண்ட்
கிரேடு பி: சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷ்ரேயாஸ் ஐயர்
கிரேடு சி: ரிங்கு சிங், திலக் வர்மா, ருத்ராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜத் படிதார், துருவ் ஜூரல், சர்ஃபராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்சித் ராணா.
தமிழ் லயன்ஸ் அணிக்கு 2ஆவது தோல்வி; ஆண்களுக்கான போட்டிகளின் முடிவுகள்!
BCCI, India
யார், யாருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்கும்?
பிசிசிஐ ஒப்பந்த பட்டியலில் கிரேடு ஏ+ பிரிவில் உள்ள வீரர்கள் ஆண்டுக்கு ரூ.7 கோடிக்கு அதிகமாக சம்பளம் பெறுவார்கள். இதனைத் தொடர்ந்து கிரேடு ஏ பிரிவில் உள்ள வீரர்கள் ஆண்டுக்கு ரூ.5 கோடி சம்பளம் பெறுவார்கள். கிரேடு பி பிரிவில் உள்ள வீரர்கள் ரூ.3 கோடியும், கிரேடு சி பிரிவில் உள்ள வீரர்க்ள் ஆண்டுக்கு ரூ.1 கோடியும் சம்பளம் பெறுவார்கள்.
கிரேடு A+: ரூ.7 கோடி
கிரேடு ஏ: ரூ.5 கோடி
கிரேடு பி: ரூ.3 கோடி
கிரேடு சி: ரூ.1 கோடி