- Home
- Sports
- 'கப் நமக்கு தான்'; பேட் கம்மின்ஸ் உள்பட 4 ஆஸி. வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகல்!
'கப் நமக்கு தான்'; பேட் கம்மின்ஸ் உள்பட 4 ஆஸி. வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகல்!
ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்பட வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளனர். முக்கியமான வீரர்கள் விலகி இருப்பதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

'கப் நமக்கு தான்'; பேட் கம்மின்ஸ் உள்பட 4 ஆஸி. வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகல்!
'மினி உலகக்கோப்பை' எனப்படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி மாதம் 19ம் தேதி முதல் மார்ச் மாதம் 9ம் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற உள்ளது. இந்த தொடரை பாகிஸ்தான் நடத்தும் நிலையில், இந்தியா அங்கு செல்ல மறுத்து விட்டதால் நமது அணி விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறும்.
உலகக்கோப்பைக்கு அடுத்த பெயர் தொடர் என்பதால் சாம்பியன்ஸ் டிராபியை கையில் ஏந்த இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட அணிகள் தீவிரமாக உள்ளன. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு பெரிய பின்னடைவாக அந்த அணியின் கேப்டன் உள்பட 4 பேர் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட முடியாத நிலை உருவாகியுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபி 2025
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மற்றும் முக்கியமான பாஸ்ட் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகி இருக்கின்றனர். இதேபோல் அந்த அணியின் அதிரடி வீரர் மிட்ச்செல் மார்ஷ் முதுகுவலி காரணமாக ஏற்கெனவே சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியிருந்தார். மேலும் யாரும் எதிர்பாராத வகையில் 35 வயதான மார்கஸ் ஸ்டோனிஸ் திடீரென ஓடிஐ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் அவரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இல்லை.
IND vs ENG 1st ODI: முதல் ஓடிஐயில் விராட் கோலி ஆப்சென்ட்; இந்திய அணியில் இருந்து நீக்கமா?
ஆஸ்திரேலிய அணி
4 முக்கியமான வீரர்கள் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பேட் கம்மின்ஸ் இல்லை என்பதால் அந்த அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. டிராவிஸ் ஹெட்டுக்கு கேப்டன் பதவி வழங்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இவர்கள் 4 பேருக்கு மாற்றாக புதிய வீர்கள் அணியில் சேர்க்கபட உள்ளனர். இந்திய டெஸ்ட் தொடரில் அசத்தியா சாம் காண்ஸ்டாஸ், வெப்ஸ்டர் ஆகியோர் சேர்க்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த 8 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம்பெற்றுள்ளன.
ஜஸ்பிரித் பும்ரா
இந்த தொடர் தொடங்கும் பிப்ரவரி 19ம் தேதி நியூசிலாந்தும், பாகிஸ்தானும் மோதுகின்றன. உலகமே ஆவலுடன் எதிர்நோக்கும் இந்தியா பாகிஸ்தான் போட்டி பிப்ரவரி 23ம் தேதி நடைபெறுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியிலும் காயம் காரணமாக ஜஸ்புரித் பும்ரா விளையாடுவதில் சந்தேகம் தான்.
சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி: ரோகி சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா.
வெற்றிக் கதை: இந்தியாவில் விளையாட்டுகளை ஆதரித்து நிலைப்பாடுகளை வலுப்படுத்துதல்