இதெல்லாம் நடந்தால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பிளே ஆஃப் வாய்ப்பு இல்லவே இல்லை!
டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக நடந்த 43ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 10 ரன்களில் தோல்வி அடைந்த நிலையில், பிளே ஆஃப் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துள்ளது.
IPL 2024, MI Play Offs
மும்பை இந்தியன்ஸ் அணியானது முதல் முறையாக ஹர்திக் பாண்டியா தலைமையில் ஐபிஎல் 2024ல் களமிறங்கியது. இதில், கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் செயல்பாடு ரசிகர்களுக்கு மட்டுமின்றி மற்ற வீரர்கள், பயிற்சியாளர்களுக்கும் விவாதத்தை ஏற்படுத்தியது. சீனியர் வீரர்களிடம் நடந்து கொள்ளும் முறை, மைதானத்தில் அவரது செயல்பாடு, பேட்டிங் மற்றும் பவுலிங்கில் அவரது பங்களிப்பு என்று ஒட்டுமொத்தமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது.
Mumbai Indians Play Offs
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2024 தொடரில் முதல் இந்தியன்ஸ் விளையாடிய 9 போட்டிகளில் 3ல் மட்டுமே வெற்றி பெற்று 6 போட்டிகளில் தோல்வியை தழுவியது. ஆரம்பத்திலேயே மும்பை இந்தியன்ஸ் ஹாட்ரிக் தோல்வியை தழுவியது. மும்பை இந்தியன்ஸ் விளையாடிய போட்டிகளில் 5 அணிகளிடம் அடி வாங்கியது. இன்னும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருக்கிறது.
Mumbai Indians, IPL 2024
ஆனால், ஒரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால், புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் இடம் பெற வேண்டும். ஏற்கனவே ராஜஸ்தான் ராயள்ஸ் கம்பீரமாக முதல் இடத்தை பிடித்த நிலையில் பிளே ஆஃப் வாய்ப்பும் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இன்னும் ஓரிரு போட்டிகளில் வெற்றி பெற்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.
Hardik Pandya, MI Play Offs
அடுத்த 3 இடங்கள் முறையே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் 10 புள்ளிகளுடன் இடம் பெற்றுள்ளன. இந்த அணிகள் குறைந்தது 2 அல்லது 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் 14 அல்லது 16 புள்ளிகள் பெறும்.
IPL 2024, Mumbai Indians
ஆனால், பிளே ஆஃப் ரேஸில் தற்போது டெல்லி கேபிடல்ஸ் அணியும் அடியெடுத்து வைத்துள்ளது. 5 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 5ஆவது இடத்தில் உள்ளது. ஆனால், சென்னை விளையாடிய 8 போட்டிகளில் 4ல் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கிறது.
Mumbai Indians Play Offs
டெல்லி எஞ்சிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்றால் கூட 16 புள்ளிகள் பெறும். அப்படியிருக்கும் போது டாப் 5 இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையில் தான் போட்டி நடைபெறுமே தவிர, புதுசு மும்பை இந்தியன்ஸ் அணியானது பிளே ஆஃப் வாய்ப்பு ரேஸில் இடம் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
IPL 2024
இதுவரையில் விளையாடிய 9 போட்டிகளில் 3 வெற்றிகளுடன் 9 ஆவது இடத்தில் இருக்கும் நிலையில் எஞ்சிய 5 போட்டிகளில் 2 முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் 2 முறை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளையும், ஒரு முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியையும் எதிர்கொள்கிறது.
IPL 2024 Play Offs
இதில், 3 அணிகளும் பலம் வாய்ந்த அணிகள் தான். ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அதனுடைய சொந்த மண்ணில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் சாதனை படைத்திருக்கிறது. இந்த நிலையில் எஞ்சிய 5 போட்டிகளிலும் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதான விஷயமல்ல. ஆதலால், குறைந்தது 2 அல்லது 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மொத்தமாக 10 அல்லது 12 புள்ளிகள் பெறும்.
Mumbai Indians Play Off Chance
அவ்வளவு தான், ஆனால், பிளே ஆஃப் வாய்ப்பு எல்லாம் கிடையவே கிடையாது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கே பிளே ஆஃப் வாய்ப்பு இல்லாத போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு மட்டும் எப்படி கிடைக்கும். எஞ்சிய 5 போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். ஆனால், அதெல்லாம் சாத்தியமில்லை. ஆனால், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில் மாற்றங்கள் நிகழும்.