- Home
- Sports
- Sports Cricket
- WI vs IND: முதல் ODI டாஸ் ரிப்போர்ட்..! ஓபனிங்கில் கில்.. விக்கெட் கீப்பர் சாம்சன்.. ஓரங்கட்டப்பட்ட ஜடேஜா
WI vs IND: முதல் ODI டாஸ் ரிப்போர்ட்..! ஓபனிங்கில் கில்.. விக்கெட் கீப்பர் சாம்சன்.. ஓரங்கட்டப்பட்ட ஜடேஜா
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்திய அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. முதலில் ஒருநாள் தொடர் நடக்கிறது. இன்று முதல் ஒருநாள் போட்டி டிரினிடாட்டில் நடக்கிறது.
ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஷமி ஆகிய பெரிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டதால், ஷிகர் தவான் கேப்டன்சியில் இந்திய அணி ஒருநாள் தொடரில் ஆடுகிறது.
டிரினிடாட்டில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் நிகோலஸ் பூரன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.
இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஷிகர் தவானுடன் ஷுப்மன் கில் தொடக்க வீரராக இறங்குகிறார். கோலி ஆடாததால் 3ம் வரிசையில் ஷ்ரேயாஸ் ஐயர் ஆடுகிறார். 4ம் வரிசையில் சூர்யகுமார் யாதவும், விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சனும் ஆடுகின்றனர்.
விக்கெட் கீப்பர்கள் சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகிய இருவரும் அணியில் இடம்பெற்றிருந்த நிலையில், சாம்சனுக்கு ஆடும்லெவனில் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஃபினிஷராக தீபக் ஹூடா ஆடுகிறார்.
ஸ்பின்னர்களாக அக்ஸர் படேல் மற்றும் சாஹலும் ஆடுகின்றனர். ஃபாஸ்ட் பவுலர்களாக ஷர்துல் தாகூர், முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவரும் ஆடுகின்றனர். ரவீந்திர ஜடேஜாவுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), தீபக் ஹூடா, அக்ஸர் படேல், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), பிரண்டன் கிங், ஷமர் ப்ரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோவ்மன் பவல், அகீல் ஹுசைன், ரொமாரியோ ஷெஃபெர்டு, அல்ஸாரி ஜோசஃப், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ்.