- Home
- Sports
- Sports Cricket
- சர்வதேச கிரிக்கெட்டில் தோற்று, ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சாதித்த வசீம் ஜாஃபர்!
சர்வதேச கிரிக்கெட்டில் தோற்று, ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் சாதித்த வசீம் ஜாஃபர்!
சர்வதேச கிரிக்கெட் வேண்டுமென்றால் கை கொடுக்காமல் இருந்திருக்கலாம், ஆனால், வசீம் ஜாஃபருக்கு ரஞ்சி டிராபி பல சாதனைகளை படைக்க வைத்தது.

வசீம் ஜாஃபர் பிறந்தநாள்
கடந்த 1978 ஆம் ஆண்டு பிப்ரவரி 16 ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தார் வசீம் ஜாஃபர். கடந்த 2000 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாஃபர் அறிமுகமானார். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பங்கேற்றார். இது தான் அவரது கடைசி டெஸ்ட் போட்டி.
வசீம் ஜாஃபர் பிறந்தநாள்
இதே போன்று கடந்த 2006 ஆம் ஆண்டு நவம்பர் 22 ஆம் தேதி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் மூலமாக ஒரு நாள் தொடரில் அறிமுகமான ஜாஃபருக்கு, அந்த தொடரே கடைசி தொடராக அமைந்துள்ளது. ஆம், 2006 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது கடைசி ஒரு நாள் போட்டியில் விளையாடினார்.
வசீம் ஜாஃபர் பிறந்தநாள்
இதுவரையில் 31 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வசீம் ஜாஃபர் 1944 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 11 அரை சதமும் அடங்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார். அதுமட்டுமின்றி 2 விக்கெட்டுகளும் கைப்பற்றியிருக்கிறார். இரு ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்று 10 ரன்கள் எடுத்துள்ளார்.
வசீம் ஜாஃபர் பிறந்தநாள் - பிப்ரவரி 16
என்னதான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை என்றாலும், உள்ளூர் போட்டிகளில் பல சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறார். ரஞ்சி டிராபியில் 12,038 ரன்கள் குவித்துள்ளார். அதுமட்டுமின்றி 40 முறை சதம் விளாசியுள்ளார். அதோடு, 89 அரைசதமும் ரஞ்சி டிராபியில் அடித்துள்ளார்.
வசீம் ஜாஃபர் பிறந்தநாள்
ரஞ்சி டிராபி கிரிக்கெட்டில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார். ரஞ்சி டிராபியில் மட்டும் 156 போட்டிகளில் வசீம் ஜாஃபர் விளையாடியுள்ளார். மும்பை மற்றும் விதர்பா அணிகளுக்காக விளையாடியிருக்கிறார்.
வசீம் ஜாஃபர் பிறந்தநாள்
கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெற்றார். வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராகவும், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரகாண்ட் அணியின் தலைமை பயிற்சியாளராகவும், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டும் ஒடிசா அணிக்கு தலைமை பயிற்சியாளராகவும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.