#ICCWTC ஃபைனல்: இந்திய அணியில் அவங்க 2 பேருமே ஆடவேண்டும்..! சேவாக் அதிரடி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் ஆடும் இந்திய அணியின் பவுலிங் காம்பினேஷன் குறித்து வீரேந்திர சேவாக் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வரும் 18-22ல் சவுத்தாம்ப்டனில் நடக்கிறது. விராட் கோலி தலைமையிலான இந்தியா மற்றும் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து ஆகிய அணிகளில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் மோதுகின்றன. இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த அணிகள் என்பதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவுள்ள நிலையில், ஃபைனல் குறித்தும் இந்திய அணியின் ஆடும் லெவன் காம்பினேஷன், பவுலிங் யூனிட் ஆகியவை குறித்தும் பல முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் பவுலிங் யூனிட் குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், இங்கிலாந்தில் ஆடுகளம் எப்படி இருக்கப்போகிறது என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அது எப்படி இருந்தாலும் சரி, நாம் நமது பலத்திற்கேற்ப ஆட வேண்டும். இந்திய அணி 5 ஸ்பெஷலிஸ்ட் பவுலர்களுடன் ஆடினால் சிறந்தது. 2 ஸ்பின்னர்களுடன் ஆட வேண்டும். ஏனெனில் கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்.
அஷ்வின் மற்றும் ஜடேஜா ஆகிய இருவருமே சிறந்த ஆல்ரவுண்டர்கள். அவர்கள் இருவரும் ஆடுவது பேட்டிங் டெப்த்தை அதிகரிக்கும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.