- Home
- Sports
- Sports Cricket
- இரண்டாவது போட்டியிலும் டக் அவுட்டான கோலி.. தடுமாறும் இந்தியா.. விரக்தியில் ரசிகர்கள்
இரண்டாவது போட்டியிலும் டக் அவுட்டான கோலி.. தடுமாறும் இந்தியா.. விரக்தியில் ரசிகர்கள்
Virat Kohli, Ind vs Aus | ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் நாட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி டக் அவுட் ஆனதால் ரசிகர்கள் விரக்தி அடைந்தனர்.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி
ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணி முழு உத்வேகத்துடன் அடிலெய்டு கிரிக்கெட் மைதானத்தில் களமிறங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கு முன் பெர்த்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியிலும் ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சி கொடுத்த கில்
இந்திய அணியின் ஓபனர்களாக கேப்டன் சுப்மன் கில், ரோகித் ஷர்மா ரன் கணக்கைத் தொடங்கினர். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், கேப்டன் கில் வெறும் 9 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி கொடுத்தார்.
கோலி மீது அதிகரிக்கும் எதிர்பார்ப்பு
கில்லைத் தொடர்ந்து இந்திய அணியின் ரன் மெஷின் விராட் கோலி களத்திற்கு வந்தார். கோலி சுமார் 7 மாதங்களுக்கு பின்னர் இந்திய அணிக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த தொடரில் அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் விரைவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை தொடருக்கு முன்னோட்டமாகவே இந்த தொடர் பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தும் வீரர்களுக்கே உலகக்கோப்பைத் தொடரில் வாய்ப்பு வழங்கப்படும் என்று சொல்லப்படுகிறது.
இரண்டாவது போட்டியிலும் டக் அவுட்டான கோலி
இந்நிலையில் வெறும் 4 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட விராட் கோலி, சேவியர் பர்ட்லெட் வீசிய பந்தில் lbw முறையில் விக்கெட்டைப் பறிகொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். முன்னதாக பெர்த் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியிலும் கோலி ரன் எடுக்காமல் டக் அவுட் ஆன நிலையில், இரண்டாவது போட்டியிலும் டக அவுட் ஆனது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.