தல தோனியின் கேப்டன்சி ரெக்கார்டை தகர்த்த கிங் கோலி..!
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் கேப்டன்சி சாதனையை தகர்த்துவிட்டார் விராட் கோலி.
இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்துவருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் 2வது டெஸ்ட்டில் 317 ரன்கள் வித்தியாசத்திலும், 3வது டெஸ்ட்டில் 10 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
3வது டெஸ்ட்டில் பெற்ற வெற்றியின் மூலம் தோனியின் கேப்டன்சி சாதனையை தகர்த்துள்ளார் விராட் கோலி. 3வது டெஸ்ட்டில் இந்திய அணி பெற்ற வெற்றி, கோலியின் கேப்டன்சியில் இந்தியாவில் இந்திய அணி பெற்ற 22வது வெற்றி.
இதன்மூலம், இந்தியாவில் இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்று கொடுத்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்துள்ளார். தோனியின் கேப்டன்சியில் இந்திய அணி இந்தியாவில் 21 டெஸ்ட் வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.