ஒரே T20 மேட்ச்சில் 549 ரன்கள், 44 சிக்சர்கள்: உலகையே அதிரவிட்ட IPL 2024 சாதனை பட்டியல்
2024ம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ள நிலையில் ஐபிஎல் தொடரின் கடந்த சீசனில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பார்ப்போம்.
IPL 2024
அதிகபட்ச மேட்ச் ஸ்கோர்
கடந்த ஏப்ரல் 15ம் தேதி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சன் ரைசரர்ஸ் அணி வீரர்களும், பெங்களூரு அணி வீரர்களும் பிரமாண்ட விருந்து படைத்தனர். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. ஓபனராக களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் பெங்களூரு அணி பந்து வீச்சாளர்களை தனது அதிரடியால் திக்குமுக்காட வைத்தார்.
IPL 2024
அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 41 பந்துகளில் 102 ரன்கள் குவித்தார். அவரைப் போன்றே மற்ற வீரர்களும் தங்கள் பங்குக்கு அதிரடி காட்ட அந்த அணி 20 ஓவர் முடிவில் 287 என்ற இமாலய இலக்கை எட்டியது.
அடுத்து விளையாடிய பெங்களூரு அணி, நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று கூறும் அளவிற்கு அதிரடி காட்டினர். தினேஷ் கார்த்திக் 83(35), டூ பிளசிஸ் 62(28) ரன்களும் எடுத்தனர். இருப்பினும் அந்த அணியால் 262 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்த போட்டியில் இரு அணிகளும் சேர்த்து 549 ரன்கள் குவித்தன.
Marcus Stoinis
மிரட்டல் மன்னன் Marcus Stoinis
அதிரடி ஆல்ரவுண்டர் மன்னனான Marcus Stoinis கடந்த சீசனில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (Lucknow Super Giants ) அணிக்காக விளையாடினார். சென்னை அணிக்கு எதிரான போட்டியில் இவர் காட்டிய அதிரடியை யாரும் மறந்துவிட முடியாது வெறும் 63 பந்துகளை எதிர் கொண்டு 124 ரன்கள் பொளந்து கட்டி இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும் இந்த போட்டியில் லக்னோ அணி வெற்றியும் பெற்றது.
Sunil Narine
அதிக மதிப்புடைய வீரர்
வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சுனில் நரைன் கொல்கத்தா அணியின் அதிரடி ஆல்ரவுண்டராக வளம் வருகிறார். பேட்டிங், பௌலிங் என இரு பிரிவுகளிலும் எதிர் அணியினரை நிலைகுலையச் செய்து வருகிறார். இவரது அதிரடியால் 3 முறை Most Valuable Player என்ற பட்டத்தையும் பெற்றுள்ளார்.
Virat Kohli
அதிக ரன், விக்கெட்
கடந்த 2024 தொடரின் போது பெங்களூரு அணியின் நட்சத்திர வீரரும், இந்தியாவின் ரன் மெஷினுமான விராட் கோலி தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த தொடரில் அவர் மொத்தம் 15 இன்னிங்ஸ்களில் விளையாடி 741 ரன்கள் குவித்து மீண்டும் ஃபார்முக்கு திரும்பினார்.
2024 தொடரில் பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஹர்ஷர் படேல் தொடரில் அதிகபட்சமாக 14 இன்னிங்ஸ்களில் விளையாடி 24 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
Virat Kohli
அதிக 50, 100
தொடர்ந்து அதிரடி காட்டிய இந்தியாவின் ரன் மெஷின் விராட் கோலியும், அவருக்கு இணையாக ராஜட் பட்டிதரும் தலா 5 முறை அரை சதம் கடந்து தொடரில் அதிக முறை அரை சதம் கடந்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பகிர்ந்துள்ளனர்.
இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரான ஜோஸ் பட்லர் 2024 தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய நிலையில் இந்த தொடரில் 2 சதம் அடித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மும்பை அணியின் வீரர் சூரியகுமார் யாதவ் 1 சதம் கடந்துள்ளார்.